4 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
மேட்டுப்பாளையம். பிப்ரவரி.1_

மேட்டுப்பாளையத்தில் 4 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை
பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர் போலீஸார்

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது பள்ளி மாணவியை அதே பள்ளி வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார். இது தொடர்பாக ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் கிளீனர் மாரிமுத்து ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து போலிசார் விசாரணை.

கோவை காரமடையில் உள்ள தனியார் பள்ளியின் 3ம் எண் கொண்ட வாகனத்தின் ஓட்டுனர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துனர் மாரிமுத்து. இருவரும் கடந்த செவ்வாய்கிழமை பள்ளி வாகனத்தில் வந்த அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி வாகனத்திலேயே பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பள்ளி வாகன ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் கிளீநர் மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Skip to toolbar