அரோமா கிரீன் டிரீ புதிய சூப்பர் ஸ்டோர் திறப்புவிழா

அரோமா கிரீன் டிரீ புதிய சூப்பர் ஸ்டோர் திறப்புவிழா

கோவை, ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி சாலையில் அரோமா கிரீன் டிரீ சூப்பர் திறப்புவிழா நடைபெற்றது. திறப்புவிழாவிற்கு அரோமா குரூப் நிறுவனர் ஆர்.பொன்னுசாமி தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவிற்கு வந்தவர்களை அரோமா பொன்னுச்சாமி, சுப்புலட்சுமி பொன்னுச்சாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். விழாவில் சமூக ஆர்வலர் எஸ்.பி.வி.அன்பரசன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆறுக்குட்டி, தொழில்அதிபர் நந்தகுமார், அரிமா சங்க பன்னாட்டு தலைவர் ஜி.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 13000 சதுரடியில் 3 தளங்களை கொண்ட இந்த நிறுவனத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், மகளிர் அழகு சாதனப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் உட்பட அனைத்தும் உள்ளன.