புதிய கிரிக்கெட் விளையாட்டு திடலை இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த்தால் திறந்து வைக்கப்பட்டது

Chennai மணப்பாக்கத்தில் ரோகித் சர்மாவின் புதிய கிரிக்கெட் விளையாட்டு திடலை இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த்தால் திறந்து வைக்கப்பட்டது…

ரோகித் சர்மாவின் புதிய கிரிக்கெட் அகாடமி திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சினிமா நடிகருமான சரத்குமார், சிங்கப்பூர் தேசிய பெண்கள் சச்சின் அணி திவ்யா, பிசிசிஐ லெவல் கோச் பிரதீப், இந்திய கிரிக்கெட் வீரரான அபினவ் முகுந்த் விழாவுக்கு விருந்தாளியாக வந்தார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எந்த ஒரு விடயம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் வழிகாட்டுதல் இருந்தால் தான் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும் அதை சார்ந்த தெளிவும் அவர்களுக்கு கிடைக்கும் எனவும் மேலும் நானும் ஒரு நல்ல விளையாட்டு காரன்தான் என்னைப் பார்ப்பதற்கு 25வயது உடையவன் போல் தான் இருப்பேன் ஆனால் உண்மையில் 64 வயது உடையவன்தான் என பகடியாகவும் பேசினார் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் விளையாட்டு திடலை திறந்து வைத்து மட்டை பிடித்து விளையாட சிறப்பு விருந்தினர் அனைவரும் ஒவ்வொரு பந்தை போட்டு விளையாடிக் கழித்து நிகழ்ச்சியை முடித்தனர் பின் போலீசாரும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா பெயரில் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்துடன் மணப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தை தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

AD

Skip to toolbar