மண் அள்ளும் இயந்திரங்களுக்கான வாடகை 20 சதவீதம் உயர்வு

மண் அள்ளும் இயந்திரங்களுக்கான வாடகை 20 சதவீதம் உயர்வு

டெமோவா தலைவர் கத்திபாரா ஜெனார்தனன் அறிவிப்பு

சென்னை, ஜன. 11-

தமிழ்நாடு மண் அள்ளும் இந்திரங்களுக்கான வாடகை 20 சதவீதம் உயர்த்தபடுகிறது என்று அந்த சங்கத்தின் தலைவர் கத்திபாரா ஜெனார்தனன் அறிவித்தார்.

தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திரத்தின் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் அதன் தலைவர் கத்திபாரா ஜெனார்தனன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் தலைவர் கத்திபாரா ஜெனார்த்தனன் இந்திரங்களுக்கான வாடகை 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது என்று அறிவித்து அதன் கட்டண விவரங்களை வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாது:-

பல ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாமல் நாங்கள் ஓரே வாடகை கட்டணத்தை வாங்கி வந்தோம். இப்போது டீசல் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் எங்களால் தொழில் செய்வதில் மிகவும் கடுமையாக உள்ளது. ஆகையால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எங்களது வாடகை கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்துகிறோம்.

மேலும் தமிழ அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ள 8 வழி சாலை திட்டத்தில் டோல்கேட் இல்லாமல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.

அதேபோன்று தமிழக மண் அள்ளும் இயந்திரங்களுக்கு தமிழகத்தின் முழுமையாக வேலை தரவேண்டும். மாறாக வெளிமாநிங்களில் இருந்து இயந்திரங்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, சங்க நிர்வாகிகள் வி.ஆர். வெங்கடேஷ், எம்.எஸ். மணி, ஜெ. விவேக், சுகுமாரன், ஏழுமலை, வாசன், சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply