இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 31வது பொது அமர்வுக்கான செய்தி

அகில இந்திய பத்திரிக்கை செய்திக்காக ..07 – 01 – 2019 பார்வை : DS / 284 / 2018 இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 31வது பொது அமர்வுக்கான செய்தி குறிப்பு அன்பின் பணியை இன்னும் அதிக வீரியத்துடன் செய்ய சென்னையில் ஒன்று கூடும் அகில .இந்திய ஆயர் பேரவையின் 31வது பொது அமர்வு |அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 31வது பொது அமர்வு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஜோ அனிமேஷன் மையத்தில் 2019 – ம் ஆண்டு சனவரி 7 – 14 வரை கூடவிருக்கிறது .இப்பொது .அமர்வு ” நற்செய்தியின் மகிழ்ச்சி ” என்ற பொருளில் சிந்தித்து திருச்சபையின் பரிவு கலந்த அன்பு . பணிக்கு திட்டங்கள் வகுத்து மறைமாவட்டம் மற்றும் பங்குதலங்களின் செயல்பாட்டுக்கு செயல் திட்டங்களை வகுக்க இருக்கிறது . இந்தியா மற்றும் நேபாளத்திற்கான வத்திகான் தூதர் பேராயர் கெம்பத்திஸ்தா திக்குவாத்ரோ அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கும் நற்கருணை கொண்டாட்டத்தோடு சனவரி 08- ம் தேதி , 2019 செவ்வாய் கிழமை இவ்வமர்வு தொடங்குகிறது . மும்பை போாயரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான மேதகு ஆஸ்வால்ட் கர்தினால் கிராசியாஸ் அவர்களின் தலைமையில் தொடக்க நிகழ்வுகள் அரங்கேறும் . பேரருட்திரு ரஃபி மாஞ்சலி – அலகாபாத் ஆயர் , பேரருட்திரு தாமஸ் தாபரே – பூனே ஆயர் , பேரருட்திரு ஜார்ஜ் பாலிகாபரம்பில் – மியாவோ ஆயர் , டெல்லியைச் சேர்ந்த அருட்திரு முனைவர் ரூடால்ஃ ஹெர்டியா , மத்தியபிரதேச மாநிலம் பச்மாறியைச் சேர்ந்த அருட்பணி பன்னீர்செல்வம் , மும்பையில் இருந்து அருட் பணி நிகில் பேரட் , பெரிலியைச் சேர்ந்த அருட் பணி ரூடால்ஃப் ரோட்ரிகுஸ் , சேலத்தைச் சேர்ந்த திரு ஜெயபிரகாசம் , கோவையைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா SJC ஆகியோர் நற்செய்தியின் மகிழ்ச்சியை திருச்சபை தன்னுடைய பரிவு கலந்த அன்புப் பணியில் எவ்வாறு முன்னேடுக்க முடியும் என்று ஆயர்களுக்கு கருத்துரை வழங்குவார்கள் .இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பதினான்கு பணிக் குழுக்கள் மற்றும் மூன்று துறைகளின் செயலர்கள் தங்களின் 2017 , 2018 ஆகிய இரண்டாண்டு பணிகளின் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் .ஆயர்கள் இந்த அறிக்கைகளை அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து விவிலியம் , மறைக்கல்வி , திருச்சட்டம் மற்றும் ஏனைய சட்டம் சார்ந்தவை , பல்சமய உணரயாடல் , குடும்பம் , பொதுநிலையினர் , திருவழிபாடு , புலம்பெயர்தல் , நற்செய்தி அறிவிப்பு .இறையியல் மற்றும் திருக்கொள்கைகள் , இறையழைத்தல் , பெண்கள் மற்றும் இளையோர் .இவற்றோடு திருத்தூது கழகம் , இந்திய மறைமாவட்ட குருக்கள் பேரவை, அகில இந்திய குருத்துவக் கல்லூரி அதிபர்களின் இயக்கம்

Leave a Reply