தா.பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார்

தா.பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு

கோவை.ஜன.7

பண்டார சமுதாயத்தை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்திய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நலச்சங்கத்தினர் கோவை கலெக்டரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்த அதன் பொருளாளர் சிவராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில் அவர் கூறியதாவது :&

எங்களது பண்டாரசமுதாயத்தை சேர்ந்தமக்கள் கோவில்களில் பூஜைகள் செய்தும், பூ வியாபாரம் செய்தும் பல சிறுதொழில்கள் செய்தும், சட்டத்திற்கு கட்டுப்பட்டு மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் சமுதாய மக்கள் பலர் அரசுப்பதவிகளிலும் இருந்து வருகின்றனர். எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் -சுமார் 50 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் வீரசைவம், லிங்காயத் என்ற பெயரில் அரசாங்கத்தை நிர்ணயிக்கும் வகையில் மாபெரும் சக்தியாக செயல்பட்டு வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடஒதுக்கீடு மூலம் அரசு சலுகைகளை பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 26.12.2018 ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்தநாள் விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பானது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் அவர் கஜாபுயல் சம்பந்தமாக பேசியதுடன் சாமியார்களும், பண்டாரங்களும் பழையபடி நம்மை திருப்பி பண்டாரமாக்க முயற்சிக்கின்றார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இந்த இழிவான பேச்சு உலகளவில் வசித்து வரும் எங்கள் இனத்தினரின் மனதை புண்படுத்தி உள்ளது.

இவர் பண்டார சமுதாயத்தை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசியதோடு மட்டுமல்லாமல் ஏதோ தீண்டத்தகாத ஜாதியாக, சமுதாயமாக உள்ளது போல் பேசியுள்ளார்.ஆகவே எங்கள் சமுதாய மக்கள் தமிழக முழுவதும் கண்டன பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு பேசிய தா.பாண்டியன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின் போது, வீரசைவ கூட்டமைப்பின் தலைவர் முத்தையா, ஒருங்கிணைப்பாளர் கோவை வசந்த், பொருளாளர் மேட்டுப்பாளையம் பேப்பர் பாலு, திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன், கோவை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சங்கம் செய்தி தொடர்பாளர் எல்.ஐ.சி.பாலசுப்பிரமணியம், அரசூர் சுந்தரம், ஜங்கம் சமுதாய ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, கோவை சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply