தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகளின் கோவை மண்டல செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகளின் கோவை மண்டல செயற்குழு கூட்டம்

கோவை : ஜன.5

தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகளின் கோவை மண்டல செயற்குழு கூட்டம் கோவை காந்திபார்க் ஓட்டல் நகாரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் அரியகுமார் தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிப் பேசிய பொதுச் செயலாளர் அரியகுமார் பேசும்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 600 மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். நாங்கள் அனைவரும் தொகுப்பூதியத்தில்தான் பணிபுரிந்து வருகிறோம். மேலும் எங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் தலைமைச்செயலகத்தினை முற்றுகைப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யவும், அதில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுவதாகவும், மற்ற துறைகளில் பணிபுரியும் மாற்றத்திறனாளிகளுக்கு பயணப்படி வழங்குவது போல் டாஸ்மாக்கில் பணிபுரியும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க அரசு ஆவண செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அருகில் மாநில துணைத்தலைவர் கந்தசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் வேலன், தேனி மாவட்டத் தலைவர் பொன்ராஜ், கோவை தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், கோவை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் உட்பட 100&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜசேகரன் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply