படித்து கொண்டே தொழில் புரியும் மாணவர்களுக்கான விருது

டித்து கொண்டே தொழில் புரியும்

மாணவர்களுக்கான விருது

கோவை. டிச.24:

தொழில்முனைவோர் (ஈ.ஓ) அமைப்பு சார்பில் படித்து கொண்டே தொழில் முனைவோர்களாக செயல்படும் உலகளவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியின் இறுதி போட்டி ஹாங்ஹாங்கில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்கான மண்டல அளவிலான போட்டிகள் கோவையில் தொழில்முனைவோர் கோவை சாப்டர் சார்பில் நடந்தது. இதில் ஈ.ஓ.தலைவர் ஜெயந்திரா, நிகழ்ச்சியின் தலைவர் செந்தில் நடராஜன் ஆகியோர் மாணவ,மாணவிகளை தேர்வு செய்தனர். போட்டியில் கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 30 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். அம்மாணவர்கள் தங்களது வியாபாரம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்து எடுத்துக் கூறினர்.

இதுகுறித்து நிகழ்ச்சியின் தலைவர் செந்தில் நடராஜன் கூறுகையில், ஹாங்ஹாங்கில் நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 40 ஆயிரம் டாலர் பரிசு தொகை வழங்கப்படும். கோவையில் நடந்த போட்டியில் தீபிகா குணசேகரன், முத்து பெரியவால் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் மத்தியபிரதேசத்தில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்பர். அங்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள் என்றார்.