உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள், எவை தரமில்லாத மட்காத பிளாஸ்டிக்

போலியான பிளாஸ்டிக் கைப்பைகளை வாங்கி மக்கள் ஏமாறவேண்டாம் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட மட்கும் மற்றும் உரமாகும் கைப்பைகளை விற்பனைச் செய்யும் ஶ்ரீ சாய் டெக்னாலஜி நிறுவனத்தினர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

இதுத்தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அந்த நிறுவனத்தினர்

வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் அதைச் சார்ந்த பல்வேறு பொருட்களை உபயோக்கிக்கூடாது என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் தடை விதித்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் எந்த வகையான பிளாஸ்டிக் கைப்பைகளை உபயோகிக்கலாம் எந்த வகையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது என்பதுக் குறித்த ஒரு தெளிவான நிலைபாடு இல்லை.

மேலும் அரசின் சட்டத்திட்டப்படி உபயோகிக்ககூடிய மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் எவை என்பதுக் குறித்தும் தெரியவில்லை.

எனவே பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், எந்தவகையான பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பதுக் குறித்தும்,

மேலும் எவை தரமான மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள், எவை தரமில்லாத மட்காத பிளாஸ்டிக் கைப்பைகள் என்பதுக் குறித்த விளக்கங்களுடன் பிரத்தேயகமாக ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்ததுதான் மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் விற்பனை மற்றும் கண்காட்சி.
இதற்கான ஏற்பாட்டினை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்ரீ சாய் டெக்னாலஜி ஏற்பாடுச் செய்திருந்தது.

இந்த விற்பனைக் கண்காட்சியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து வகையான மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைக்பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் அனைத்தும் அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ சாய் டெக்னாலஜி நிறுவனர் ஆகாஷ் விஜய் தெரிவித்தார்.

இந்த வகையான மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் தரத்துடனும், அசலுடனும் தயாரித்து வரும் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம் என்றும் குறிப்பாக போலியாக தயாரித்து மட்கும் பிளாஸ்டிக் கைப்பைகள் என விற்பனைச் செய்யும் நிறுவனங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக நம் அடுத்த சந்ததியினர் மட்காத மற்றும் உரமாகாத பிளாஸ்டிக் இல்லா நகரத்தில் வாழ நாமே வழிக்காட்டியாக இருக்க வேண்டும்
என்பதே எங்களின் பிரதானக் குறிக்கோளாகும் எனவும் அவர் கூறினார்.

பேட்டி- ஆகாஷ் விஜய்- நிறுவனர்.
ஸ்ரீ சாய் டெக்னாலஜி.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தென்னிந்திய மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் வினியோகிஸ்தர்.