கைவினைப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார்

புது வருட பரிசுகள் கண்காட்சி மற்றும் விற்பனை”

கோவை,டிச.25:

கைவினைப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம், ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப் போல வரும் புத்தாண்டை முன்னிட்டு “புது வருட பரிசுகள் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகிறது. இக்கண்காட்சியானது 21.12.2018 முதல் 05.01.2019 வரை நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடக்கிறது.

தமிழ் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் களிமண் பொம்மைகள், மெழுகுவர்த்தி ஸ்டேண்டுகள், நற்செய்தி வார்த்தைகள் பொரிக்கப்பட்ட மர பலகைகள், கீ செயின்கள், நூக்கமர உட்பதிப்பு வேலைப்பாடுகள் ஒவியங்கள், வெள்ளை உலோக பரிசு பொருட்கள், தஞ்சை ஒவியங்கள், பித்தளை மற்றும் மர பரிசு பொருட்கள் மற்றும் ஏராளமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கைவினைப்பொருட்கள் 10 சதவிகிதம் வரை சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இக்கண்காட்சி மூலம் ரூபாய் 5.00 இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.