சென்னையின் அதிகக் கவரச்சியான பிராண்ட்கள் பட்டியலில் டிவிஎஸ் (இரு சக்கர வாகனங்கள்) 1ஆவது, ஐடிசி 2ஆவது, எல்ஜி (தொலைக்காட்சிப் பெட்டிகள்) 3ஆவது இடங்களைப் பிடித்தன

????????????????????????????????????

இந்தியாவின் அதிக கவர்ச்சியான பிராண்ட்கள் அறிக்கை 2018 (ஏம்ஏபி 2018) 5ஆவது எடிஷனில், நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப, டிஆர்ஏவின் பிராண்ட் கவர்ச்சி ப்ரொப்ரைடரி அடிப்படையில், நாட்டின் அதிக கவர்ச்சியான 1000 பிராண்ட்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவின் 16 நகரங்களில் 2500க்கும் அதிகமான நுகர்வோரிடம் நடத்தப்பட்ட ஆய்வு வருடாந்திர ஆய்வாகும். சென்னை நுகர்வோர் டிவிஎஸ் இரு சக்கர வாகனத்தை நகரின் அதிகக் கவர்ச்சியான பிராண்டாக 1ஆவதாக (அகில இந்தியப் ரேங்க் 67ஆவது) தேர்ந்தெடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஐடிசி 2ஆவது (அகில இந்திய ரேங்க் 85ஆவது), எல்ஜி தொலைக்காட்சிப் பெட்டி 3ஆவது (அகில இந்திய ரேங்க் 5ஆவது) இடங்களைப் பெற்றுள்ளன. டிஆர்ஏ ஆய்வு நுகர்வோரின் வாங்கும் போக்கை பிராண்ட் டிரஸ்ட் மற்றும் பிராண்ட் கவர்ச்சி புரொப்ரைடரி மேட்ரிசஸ் மீது அறிவியல் ரீதியாக 2010 முதல் ஆராய்ந்து வெளியிட்டு வருகிறது.

சென்னை நுகரிவோரின் தேர்வு முதல் ரேங்க் பெற்ற நிறுவனம் தொடங்கி இந்தியா மற்றும் தென் இந்திய நுகர்வோரிடமிருந்து பெரிதும் மாறுபட்டதாகும். சென்னை ரேங்கிங்க் பட்டியலில் ரிலயன்ஸ் ஜியோ 4ஆவது (அகில இந்தியா 4ஆவது), டாடா மோட்டார்ஸ் நான்கு சக்கர வாகனம் 5ஆவது (அகில இந்தியா 2ஆவது), சோனி தொலைக்காட்சிப் பெட்டி 6ஆவது (அகில இந்தியா 13ஆவது), ஹுண்டய் 7ஆவது (அகில இந்தியா 18ஆவது), எல்ஐசி 8ஆவது (அகில இந்தியா 16ஆவது), சாம்சங்க் நுகர் பொருள் 9ஆவது (ஆகில இந்தியா 6ஆவது), எல்ஜி நுகர் பொருள் 10ஆவது (அகில இந்திய 43ஆவது) இடங்களைப் பிடித்துள்ளன. சென்னைப் பட்டியலில் அகில இந்தியாவை விடவும் கூடுதல் ரேங்கிங்க் பெற்ற நிறுவனங்கள் ஐடிசி (+83 ரேங்க்), ஆப்பிள் மெக்புக் (+77 ரேங்க்), டிவிஎஸ் (+66 ரேங்க்), பிரிட்டானியா (+50 ரேங்க்).

ஒவ்வொரு நகரத்துக்கு இடையே ரேங்கிங்கில் உள்ள வித்தியாசமான வேறுபாடுகள் குறித்து டிஆர்ஏ ரிசர்ச் சிஇஓ என் சந்திரமௌலி கூறுகையில் ‘கவர்ச்சி அடிப்படையிலான வாடிக்கையாளர் தேர்வுகள் பிராண்ட்கள் மீதான அவர்கள் விருப்பத்தைக் காட்சிப்படுத்துவதுடன் நகரின் தனித்தன்மையைப் பிரதிபலிக்கிறது. சென்னை தேர்ந்தெடுத்த அதிக கவர்ச்சியான பிராண்ட்கள் அகில இந்திய ரேங்கிங்க் பட்டியலுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறாக இருப்பதால், சென்னை நுகர்வோர் வித்யாசமாகச் சிந்தித்துச் செயல்படுவது உறுதியாகி உள்ளது. பல்வேறு நகரங்களைச் சேர்ந்த நுகர்வோர் நடத்தை மாற்றங்கள் பிராண்ட்களின் வெற்றி தோல்விக்கு இடையேயான வேறுபாட்டை உணர்த்துகின்றன’ என்றார்.

அகில இந்திய ரேங்கிங்குடன் ஒப்பிடுகையில் சென்னை ரேங்கிங்கில் இறக்கத்துடன் காணப்படும் பிராண்ட்கள் தாபர், லிம்கா, அமுல், ஃபிலிப்ஸ், அப்பிள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இது பற்றி சந்திரமௌலி மேலும் தொடர்கையில் ‘சென்னை நகரின் கலாச்சாரம், சுற்றுச்சூழல், அரசியல், சமூகம் ஆகியவை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வேறாக இருப்பதால் இங்குள்ள நுகர்வோரின் நடத்தையும், செயல்பாடும் வித்யாசமாகவே உள்ளன. கலாச்சார ரிதியாக பின்னிப் பிணைந்த நிலையில் பிராண்ட் – நுகர்வோர் இணக்கம் -20% என்னும் அளவில் மிகக் குறைவாகும். புது பிராண்ட்களை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனேயே ஏற்றுக் கொள்கின்றனர். புதுசு நல்லதுதான் என்றாலும் ஒவ்வொரு சாப்பாட்டையும் தயி சாதத்துடனேயே நிறைவு செய்யவே அவர்களுக்குப் பிடிக்கும்’ என்றார்.