கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாராம்சத்தில் பெருமை கொள்ளும் வில்லேஜ் டிக்கெட், கிராமம் அடிப்படையிலான கருத்தாக்கத்தை சென்னையில் மீண்டும் ஒரு முறை உருவாக்கவுள்ளது. நமது அற்புதமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பராமரிக்க உதவும் மற்றும் நவீனத்துவத்திலிருந்து அவற்றை பாதுகாத்து வரும், கிராமத்து வாழ்வின் மூன்று தூண்களான – விவசாயிகள், கலைஞர்கள் மற்றும் சமையல்நிபுணர்களை கெளரவிக்கும் நோக்கில், பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்டரிங் நிறுவனத்துடனான கூட்டாண்மையோடு மேற்கொள்ளப்படும் கூட்டு முன்முயற்சி வில்லேஜ் டிக்கெட் ஆகும். வில்லேஜ் டிக்கெட் 2019 நிகழ்வு, சென்னை ஓஎம்ஆரில் அமைந்துள்ள, சத்யபாமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில், ஜனவரி 3, 4, 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெறவுள்ளது.
2வது சீஸனின் அறிமுகம் மற்றும் கொண்டாட்டம் துவங்குவது குறித்த அறிமுக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிராண்ட் அவதார் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.ஹேமசந்திரன் அவர்கள், “முதலாவது பதிப்பின் வெற்றியானது, நகரத்து மக்களுக்கு அவர்களது பாரம்பரிய வேர்கள் மற்றும் வழக்கங்கள் குறித்து மீண்டும் அறிமுகம் செய்யும் வகையிலான உணவு பொருட்கள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலைகள் மற்றும் வேளான் வழக்கங்கள் மற்றும் உற்பத்தி குறித்து நினைவூட்டும் வகையில், இதை ஒரு வழக்கமான நிகழ்வாக மாற்ற, எங்களைத் தூண்டியது” கீழ்காணும் வகையில், வில்லேஜ் டிக்கெட் நிகழ்வின் போது, நாங்கள் அவர்களை வரவேற்று கௌரவிக்கவுள்ளோம்:
பாரம்பரிய வேளான் முறைகளின் வழியாக, நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவரும் விவசாயிகள்
கிராமத்து சுவையை தொடர்ந்து தக்கவைப்பதில் பேரார்வத்துடன் செயலாற்றி வரும் சமையல் நிபுணர்கள்
கிராமங்களின் பாரம்பரிய கலை வடிவங்களை தொடர்ந்து பாதுகாத்து வரும் கலைஞர்கள்

கிராண்ட் கேட்டரிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.திலகரசு அவர்கள், பிராண்ட் அவதார் உடனான கூட்டாண்மையோடு, இம்முன்முயற்சியை நமது நகரின் மக்களுக்கு கொண்டு வருவதில் தான் மிகுந்த பெருமையும் மற்றும் கௌரவமும் அடைவதாக தெரிவித்தார். தனது உணவுப் பின்னணி மற்றும் வில்லேஜ் டிக்கெட் போன்ற பாரம்பரிய நிகழ்விற்கு நியாயம் கற்பிக்கும் வகையில், வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து தான் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டதாகவும் மற்றும் அதற்காக உணவுகளை கிராமத்து விருந்து, கறி விருந்து மற்றும் கல்யாண விருந்து என மூன்று வகைப்பாடுகளில் பிரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்டரிங் நிறுவனங்களில் இந்த, கலாச்சார பாதுகாவலர்களைக் கொண்டாடும் முன்முயற்சியை, நிகழ்வின் தலைமை விருந்தினரும் மற்றும் தமிழக அரசின், தமிழ், தமிழ்கலாச்சாரம் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையின் மாநில அமைச்சருமான திரு.பாண்டியராஜன் அவர்கள் துவக்கிவைத்தார். இது பழைய நினைவுகளையும் மற்றும் பாரம்பரிய கிராமப்புற அனுபவங்களையும் கொண்டு வருகிறது என்று அவர்தெரிவித்தார். முதலாம் பதிப்பிற்கும் வருகை தந்திருந்த மதிப்பிற்குரிய அமைசர் அவர்கள், சென்னை வாழ் மக்கள் இந்த விழாவை அனுபவித்துப் பார்க்க வேண்டுமென்றும் மற்றும் அடுத்த தலைமுறைக்கு இப்பாரம்பரியங்களை கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.
நல்ல கீரை அமைப்பின் நிறுவனர் திரு.ஜெகன்னாதன் அவர்களது நல்ல சந்தை கண்காட்சியில், சமீபத்தில் அறுபதாயித்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து, இயற்கையான பழங்கள், காய்கறிகள், அரிசி, எண்ணெய் வித்துகள் மற்றும் பலவற்றை வாங்கினர். வில்லேஜ் டிக்கெட் நிகழ்வில் பங்கேற்கவுள்ள நல்ல சந்தை, பல்வகைப்பட்ட உயிரியல் ரீதியில் வளர்க்கப்பட்ட கீரைகள், ஆர்கானிக் எண்ணெய் வகைகள், பருப்புகள் போன்றவற்றை விற்பனை செய்யவுள்ளது. இதன் அடிப்படை கருத்தாக்கம், விவசாயிகளை “சென்னை மக்களுடன்” நேரடியாக இணைப்பது மற்றும் உற்பத்தியாளர்களையே விற்பனையாளர்களாகவும் மாற்றுவதாகும்.
ஒரு ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், பயிர் நடுதல், களை பிடுங்குதல், அறுவடை செய்தலை மேற்கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கப்பெறும்.
வில்லேஜ் டிக்கெட் ஸ்பான்ஸரான அன்சியோ மார்க்கெட் பிளேஸ், உயிரியல் ரீதியில் உற்பத்தி செய்யப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட மூன்று வகைப்பாட்டு உணவு வகைகளையும், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் தள்ளுபடியுடன், ரூ.650 முதல் ரூ.850 வரையிலான விலையில் வழங்குகின்றது. இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ள, அன்சியோ ஆப்பை (Ansio app)பதிவிறக்கம் செய்து லாக் ஆன் செய்யவும். நுழைவு டிக்கெட்கள் அன்சியோ ஆப்பில் மட்டுமே வாங்கலாம். https://ansio.in/
3 முதல் 6 ஜனவரி 2019 வரை நடைபெறவுள்ள இந்த நான்கு – நாள் வில்லேஜ் டிக்கெட் நிகழ்வில், வாழைஇலையில் பரிமாறப்படும், கிராமத்து விருந்து (மதிய உணவு புஃபே 12 மணி முதல் நண்பகல் 3 மணி வரை) – சைவம் மற்றும் அசைவம் (48 உணவு வகைகளுடன்), கறி விருந்து (அசைவ இரவு உணவு) மற்றும் கல்யாண விருந்து (சைவ இரவு உணவு) இரண்டும் 32 உணவு வகைகளைக் கொண்ட (மாலை 06:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை) ஆகிய மூன்று வகைப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. உறியடி, வில்வித்தை, நேரடியாகப் பானை செய்தல் போன்ற 20 – க்கும் மேற்பட்ட கிராமத்து விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்பு நகர மக்களுக்கு கிடைக்கப்பெறும். கரகாட்டம், சிலம்பாட்டம், மங்கள வாத்தியம் போன்ற பல்வேறு கிராமத்து கலை நிகழ்ச்சிகள் மாலை 05:00 மணி முதல் இரவு 10:00 மணி வரைநடத்தப்படவுள்ளது. கிராமத்து, ஊறுகாய்கள், காரவகைகள், இனிப்புகள் போன்ற வாங்கிச்செல்லும் உணவு வகைகள் உட்பட, பல்வேறு உணவுப் பொருட்கள் காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை விற்பனை செய்யப்படவுள்ளன. நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.100 மட்டுமே
அன்சியோ மார்க்கெட் பிளேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தலைமை செயல்அலுவலர், திரு.ராம சுப்ரமணிய ராஜா நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாவர் மற்றும் நேச்சுரல்ஸ் சலூன் தலைமை செயல் அலுவலர் திரு.C K.குமரவேல், நடிகை மற்றும் சமூக ஆர்வலர் கஸ்தூரி, நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் திரு.ஆரி, தமிழகம் ஆர்கானிக் ஃபார்மிங்கைச் சேர்ந்த திரு.K.எழிலன் மற்றும் நல்ல கீரை நிறுவுனர் திரு.ஜெகன்னாதன் ஆகியோர் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர்.
நேரம்
செயல்பாடுகள்

அனைத்து நேர செயல்பாடுகள்
( காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை)
நல்ல சந்தை, வேளான் செயல்பாடுகள், அசல் உணவு ஸ்டால்கள் மற்றும் கல்லூரி & பள்ளி செயல்பாடுகள்.

மதிய நிகழ்வு
(மதியம் 12 மணி முதல் 3 மணி வரை)
கிராமத்து புஃபே விருந்து

மாலை நிகழ்வு
(மாலை 5 மணி முதல் 10 மணி வரை)
நிகழ்வுகள், கிராமத்து விளையாட்டுகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்

இரவு நிகழ்வு
(மாலை 06:30 மணி முதல் இரவு 10 மணி வரை)
கறி & கல்யாண விருந்து