ஆகாஷ் மருத்துவமனையின் புதிய கிளையின் திறப்பு விழா

ஆகாஷ் மருத்துவமனையின் புதிய கிளையின் திறப்பு விழா கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. இந்த புதிய கிளையின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வசந்த் குழும தலைவர் வசந்தகுமார் ,திரைப்பட நடிகரும், இயக்குனரும் ஆனா பாண்டியராஜன் கலந்து கொண்டு மருத்துவமனை மற்றும் பெமிலிப்ட் எனும் லேசர் சிகிச்சை கருவியினை துவக்கி வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் அம்மிருத்துவமனையின் இயக்குனர்களான டாக்டர்.டி. காமராஜ்,
டாக்டர்.ஜெயராணி செல்வராஜ் , கடலோர காவல் படை ஐ.ஜி.பவானிஸ்வரி, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் துணை இயக்குைரும், டி.ஐ.ஜியுமான ராதிகா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டரை்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர். ஜெயராணி காமராஜ்…

பெமிலிப்ட் என்ற இந்த நவீன லேசர் கருவியின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும்

மேலும் இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் எந்த வித மயக்கமருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் மருத்துவமனையில் அனுமதி இல்லாமல் புறநோயளிகளாகவே வந்து ஒரு சில நிமடங்களில் செய்து கொண்டு திரும்பிவிடலாம் எனவும், இந்த புதிய கிளை திறப்பை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு எந்த விட கட்டணமின்றி இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்…