Brilliant TVS ஷோரூம் கோலாகல திறப்பு விழா

ராஜ கீழ்பாக்கம் பிரில்லியண்ட் டிவிஎஸ் (Brilliant TVS) ஷோரூம் கோலாகல திறப்பு விழா .

இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் இரு சக்கர வாகன தயாரிப்பில் முதன்மையாக இருக்கிறது.

இந்நிறுவனத்தின் விற்பனை டீலர் பிரில்லியண்ட் டிவிஎஸ் (Brilliant TVS) சென்னை இராஜ கீழ்பாக்கம், காமராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோடு விலாசத்தில் பிரமாண்டமான ஷோரூம் , மற்றும் சர்விஸ் அவுட் லெட்டை துவக்கியுள்ளது.

இங்கு அனைத்துவிதமான இரு சக்கர வாகனங்கள் உரிய நேரத்தில் கிடைக்கும்.சர்விஸ் மற்றும் பழுது பார்க்கும் பணிமனை இங்கு மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய பிரில்லியண்ட் டிவிஎஸ் ஷோரூமை செம்பாக்கம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜி.எம்.சாந்தகுமார் திறந்து வைத்தார்.
தாம்பரம் சென்டரல் ரோட்டரி சங்கம் உஷா அஜித் பிரசாத், இரு சக்கர வாகன பணிமனை உரிமையாளார்கள் சங்க தலைவர் ஆர்.ஏ.ஜெயபால், ஆர்.சேகர், எம்.ராஜராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு எற்றி வைத்தனர்.

மேலும் பிரில்லியண்ட் ஷோரூமின் உரிமையாளர் வி.கே.ஆர்.வடிவேலன் , அவரது குடும்பத்தினர், மற்றும் நிறுவன ஊழியகள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செம்பாக்கம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஏ.ஆர்.டி.லோகநாதன் தானியங்கி சர்விஸ் பிரிவை தொடக்கி வைத்தார். இரு சக்கர வாகன ஷோரூம் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.குப்புசாமி உதிரி பாக விற்பனை பிரிவை துவக்கி வைத்தார்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன துணை மேலாளார் வீ.ரகுநந்தன் மோட்டார் சைக்கிளின் முதல் டெலிவிரியை வழங்கினார்.
செம்பாக்கம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு ஸ்கூட்டியின் முதல் டெலிவயை வழங்கினார். செம்பாக்கம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜி.மணி மொபட்டின் முதல் டெலிவிரியை வழங்கினார்.