பர்மா மற்றும் இலங்கையிலிருத்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்விற்காக

பர்மா மற்றும் இலங்கையிலிருத்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்விற்காக

ரெப்கோ வங்கி “மத்திய அரசால் 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் நாள் தொடங்கப் பெற்றது.இந்த வங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசும் இந்த வங்கியின் பங்குதாரர்கள். மத்திய அரசின் உள்துரை அமைச்சகத்தின் மூலம் நியமிக்கப்பட்ட இயக்குநர்களைக் கொண்ட இயக்குநர் குழு (Board of Directors) வின் நேரடி பார்வையில் வங்கி நிர்வகிக்கப்பட்டு வருகிறது மத்திய மற்றும் தென் மாநில அரசுகளின் மூத்த IAS அதிகாரிகள் மற்றும் தாயகம் திரும்பியோர் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர்கள் ஆகியோரை உள்ளடக்கியது. இயக்குநர் குழு .தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் இவ் வங்கியின் தலைவராக ( Chairman) உள்ளார். இவ் வங்கி 50 ஆண்டுகளாக ஈடு இணையற்ற சேவையினை வழங்கி வரும் தனித்துவமான வங்கியாகும். வங்கி வளர்ச்சி ஓர் பார்வை. வங்கி வர்த்தகம் ரூ.14,300 கோடி. நிகர லாபம் ரூ. 105 கோடி .நிகர மதிப்பு ரூ.700 கோடி .108 கிளைகளில் 890 பணியாளர்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்.20 சதவிகித நிலையான ஈவுத்தொகை வழங்குதல். வங்கியின் 50 ஆம் ஆண்டு பொன் விழா 24.11.2018 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் அம்மா அரங்கம், அண்ணா நகர் கிழக்கு, சென்னை – 600 040 இல் நடைபெற்றது இங் விழாவில் வங்கியின் தலைவர் திரு. P.செந்தில்குமார். I.A.S., முதன்மை செயலாளர் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு அரசு அவர்கள் தலைமை விருந்திரை சிரப்புரை ஆற்றினார்.விழாவில் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S., மறுவாழ்வு துறை இயக்குநர் அவர்கள், திரு.T.S. கிருஷ்ணமூர்த்தி, தலைவர், ரெப்கோ வீட்டு வசதி நிறுவனம் மற்றும் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மற்றும் வங்கியின் இயக்குநர்கள் திரு. I..முனீஸ்வர கணேசன், திரு. P. மகாலிங்கம், வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், விழாவில் “வங்கியின் பேரவை பிரதிநிதிகள் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், துணை நிறுவன அலுவலர்கள், சிறப்பு விருந்தினர்கள் பெருமளவில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வங்கி நிறுவன நாளினை முன்னிட்டு. 19.11.2018 அன்று 500 பொதுமக்களுக்கு தி.நகர் பகுதியில் வங்கி மருதுவ முகாமினை ஏற்பாடு செய்தது.

Skip to toolbar