வேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்

சென்னையின் வேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்

இந்நிகழ்வின்போது பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ்

கண் தானம் என்ற உன்னத நோக்கத்தை வலியுறுத்தினார்

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு இலவச கண் அறுவைசிகிச்சைகள் செய்யப்படவுள்ளன

நவம்பர் 17: 1957ஆம் ஆண்டிலிருந்து கண் மருத்துவ சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடிகளாகத் திகழும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளுள் ஒன்றான வேளச்சேரியில் வசிக்கும் மக்களுக்காக தனது மிக நவீன மருத்துவமனையை தொடங்கியிருக்கிறது.

இந்த தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்தபோது, அங்கு கூடியிருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களின் பலத்த கையொலி எழுந்தது. அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், மற்றும் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். அஷார் அகர்வால் மற்றும் பிற பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

தங்களது வேளச்சேரி மருத்துவமனை தொடங்கப்படுவதை குறிக்கும் வகையில், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு கட்டணமில்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் செய்யப்படும் என்று இம்மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியின்போது பேசிய திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ், “இந்நிகழ்வில் கலந்துகொள்வதும் மற்றும் எனது கண்களை தானம் செய்வதும் எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது. கண் சிகிச்சை பிரிவில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஒரு முன்னோடியாக தொடர்ந்து இருந்து வருகிறது. தங்களது பணி மற்றும் ஆராய்ச்சியில் பல சாதனைகளை செய்திருக்கும் இவர்களுக்கு பல கவுரவங்களும், பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன. வேளச்சேரியில் உள்ள இம்மருத்துவமனை தொடக்கவிழாவிற்கு என்னை அழைத்ததற்காக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 100 நபர்களுக்கு கட்டணமில்லாமல் இலவச அறுவைசிகிச்சையை செய்ய முன்வந்திருக்கும் அவர்களின் தாராள மனதையும் மற்றும் சேவையையும் நான் மனதார பாராட்டுகிறேன்,” என்று கூறினார்.

கண் மருத்துவ சிகிச்சையில் சிறப்பான சேவைக்காக அயராது பணியாற்றிவரும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மீது புகழாரம் சூட்டிய அவர், கண் தானத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வலியுறுத்தினார். “கண் தானம் என்பது ஒரு சிறப்பான நோக்கமாகும். வேறொருவரின் வாழ்க்கையில் ஆக்கபூர்வ மாற்றத்தை உருவாக்க உதவ தங்களது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏற்க அதிக எண்ணிக்கையில் மக்கள் முன்வரவேண்டும். இம்மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள வசதிகளும் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அனுபவமும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அளப்பரிய சேவையை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கீர்த்தி சுரேஷ் மேலும் கூறினார்.

அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால் தனது உரையில் கூறியதாவது: “முழுமையான மற்றும் தரமான கண் மருத்துவ சிகிச்சைக்கான தேவையுள்ள பகுதிகளில் எமது சேவைகளை விரிவாக்கம் செய்வது எங்களது கடமை என்று நாங்கள் கருதுகிறோம். இந்த உள்ளார்ந்த உணர்வு விளைவாகவே இந்த வேளச்சேரி மருத்துவமனை உருவாகியுள்ளது. 1957ஆம் ஆண்டிலிருந்து கண் மருத்துவம் மீது உண்மையான பற்றினைக் கொண்டு ஒரு அமைவிடத்திலேயே முழுமையான கண் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கு மிக நவீன சாதனங்களை நிறுவியிருப்பது மூலம் உயர்வான சர்வதேச தரநிலைகளை அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகள் தொடர்ந்து பேணி வருகின்றன”.

“இந்தியாவில் காணப்படுகிற பார்வைத்திறன் பிரச்சனைகளுள் ஏறக்குறைய 80%, வருவதற்கு முன்பே தடுக்கப்படக்கூடியவை அல்லது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியவையாகும். எனினும் விழிப்புணர்வின்மை மற்றும் தரமான கண் சிகிச்சைக்கான அணுகுவசதியின்மை ஆகியவற்றின் காரணமாக குணமடைகிற விகிதாச்சாரம் குறைவாகவே இருக்கிறது மற்றும் இதனால் பல நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படாமலேயே பிரச்சனைகளுடன் வாழ வேண்டியிருக்கிறது,” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இளம் தலைமுறையினருக்கென அவர் வழங்கிய செய்தியில், “புதிய மின்னியல் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் எலெக்ட்ரானிக் திரைகளின் காரணமாக குழந்தைகள் அதிகரித்த கண் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். நமது கண்களில் இருக்கின்ற திரவ நீர், அளவுக்கு மீறிய பயன்பாட்டின் காரணமாக உலர்வடையத் தொடங்குகிறது மற்றும் குழந்தைகளின் பார்வைத்திறனை பாதிக்கிறது. ஒரு சமீபத்திய ஆய்வின்படி பள்ளிக்கு செல்வதற்கு முந்தைய வயது பிரிவில் உள்ள குழந்தைகளில் பார்வைத்திறன் பாதிப்புகள், 26% அதிகரிக்கும் மற்றும் அடுத்த 45 ஆண்டுகள் என்ற காலஅளவில் ஏறக்குறைய 2,20,000 குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். அஷார் அகர்வால் பேசுகையில், “மிகப் பெருமையுடனும், பெருமிதத்தோடும் வேளச்சேரியில் எமது மருத்துவமனையை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வசதிபடைத்த பிரிவினர் உயர்தரமான கண் மருத்துவ சேவைகளை தடங்கலின்றி பெறுகின்ற நிலையில் ஏழை மக்களால் அதற்கு செலவிட இயலாது. இந்த இடைவெளியை குறைப்பதற்காக வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு இலவச கண் அறுவைசிகிச்சைகளை செய்ய நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம். இது ஒரு வெறும் தொடக்கம் மட்டுமே; இத்தகைய நடவடிக்கைகள் இனியும் தொடரும்.

சென்னை மாநகர் எங்கிலும் 15 கிளைகளை நாங்கள் கொண்டிருக்கும்போது, விரிவான கண் பராமரிப்பிற்கான குவிமையமாக கத்தீட்ரல் சாலையில் அமைந்துள்ள எங்களது மருத்துவமனை திகழ்கிறது. இம்மாநகரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளுள் ஒன்றாக வேளச்சேரி உருவெடுத்திருப்பதை நாங்கள் கவனித்தோம். இப்பகுதியில் வாழும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக வேளச்சேரியில் கண் பராமரிப்பில் ஒரு நிறுத்த அமைவிடமாக மற்றுமொரு முழுமையான கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்க நாங்கள் முடிவுசெய்தோம். வேகமாக விரிவாக்கம் அடைந்துவரும் இம்மாநகரின் இப்பகுதியைச் சேர்ந்த எமது நோயாளிகள் கண் மருத்துவவியலில் அவசியப்படுகிற எந்தவொரு மற்றும் அனைத்து சிகிச்சைகளுக்கும் இனிமேல் வேறு எங்கும் பயணிக்க தேவையில்லை,” என்று கூறினார்.

வேளச்சேரி பகுதியில் ஏராளமான தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களை கணினி திரைகளுக்கு முன்னால் அவர்கள் செலவழிக்கவேண்டியிருப்பதால் அவர்களது கண் ஆரோக்கியத்தின் மீது தொடர்ச்சியான கவனிப்பை அவர்கள் கொண்டிருப்பது அவசியமாகும். இத்தகைய தொழில்நுட்ப பணியாளர்கள் அவர்களது கண்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதற்கு அவர்களது நம்பிக்கைக்குரிய தோழனாக வேளச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள இம்மருத்துவமனை இருக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.

பழைய சர்வே எண். 465/2, ஆர்.எஸ். 465/8, வேளச்சேரி கிராமம், கிண்டி தாலுகா, 150 அடி பைபாஸ் சாலை, வேளச்சேரி, சென்னை – 600042 (என்ஏசி ஜுவல்லர்ஸ்-க்கு அடுத்து) என்ற முகவரியில் அமைந்துள்ள இப்புதிய மருத்துவமனை முழுமையான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது. சமீபத்திய நவீன சாதனங்களைக் கொண்டிருக்கும் இம்மையம் கண் பராமரிப்பில் மிகச்சிறந்த சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்கும்.

பரிசோதனையகம், மருந்தகம் மற்றும் உயர்தரமான, முன்னணி பிராண்டுகளின் ஃபிரேம்கள் மற்றும் லென்ஸ்களை வழங்குகிற கண் கண்ணாடியகம் ஆகியவையும் இம்மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

(சென்னை நிருபர் நெல்சன்)

Skip to toolbar