சர்தார் வல்லபாய் படேல் 143 வது பிறந்த நாள் விழா

சர்தார் வல்லபாய் படேல் 143 வது பிறந்த நாள் விழா

மற்றும் தேசிய ஒற்றுமை தினம்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் முதலாவதாக கல்லூரியின் சுற்றுச்சூழல் குழு சார்பாக 143 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இது குறித்து கோவை பீளமேட்டில் இயங்கி வரும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் அவரை நினைவுகூறும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும், செயல்படவும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியுடன் மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது.

மக்களிடத்தில் ஜாதி,சமய,மத,மொழி வேற்றுமைகளின்றி ஒற்றுமையை நிலைநாட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக விழிப்புணர்வு குழுமம் மற்றும் தேசிய பஞ்சாலைக்கழகம்(NTC) ஆகியவை இணைந்து விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது-. இதில் 250 மாணவர்களும், NTC பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ ரங்கவிலாஸ் பஞ்சாலையில் மேலாண்மை இயக்குனர் ரமேஷ்குமார் முன்னிலையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த மாரத்தான் ஓட்டமானது கோவை அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கவிலாஸ் பஞ்சாலையிலிருந்து இருந்து துவங்கி G.V.ரெசிடென்சி வரையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது அவர்கள் தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு ஓடினர். இந்த ஓட்டமானது பகல் 11 மணியளவில் முடிவு பெற்றது.

இவ்விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் ரமேக்ஷ் குமார் மற்றும் தேசிய பஞ்சாலை கழகத்தின் அலுவலக இயக்குனர் வெங்கடேஷ், ஸ்ரீ ரங்கவிலாஸ் பஞ்சாலை நிர்வாகி குங்குமராஜு மற்றும் NTC மனித வள மேம்பாட்டு மேலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் துவங்கி வைத்தனர். மரக்கன்றுகளை குழு உறுப்பினர்களான மைத்தீஷ் பிரபு, சுப்புராஜ், பிரவீன் குமார், தயாபரன், அருன்குமார், செழியன், சோமேஷ் ஆகியோர் வாங்கி வந்து கல்லூரி வளாகத்தில் நட்டனர். மாணவர்களே மரங்களைப் பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இம்மரக்கன்றுகளுள் பிராண வாயு தரும் மரங்களான புங்கை, வேம்பு, அரசன், பூவரசன், மூங்கில், மட்டுமின்றி பழங்கள் தரும் மரங்களான கொய்யா, பப்பாளி, மா, சீதா, எலுமிச்சை, மாதுளை, வாழை ஆகியவையும் அடங்கும். மேலும் அரிய வகை மரங்களாகிய சொர்கம், தாளிஜந்தர், தண்ணீர்க்காய், பென்சில், லகஸ்டோமியா, நாகலிங்கம் ஆகியவையும் மருத்துவ குணமுடைய செடிகளாகிய மெந்த்தால், ரனகள்ளி, சீமை அகத்தி, அக்கிரஹாரம், முருக்கட்டி, நாமல்லி, திருநீர் பத்திரி, ஃபாரஸ்ட் ஃப்லேம், நிலவேம்பு, நாகமல்லி, துளசி ஆகியவையும் அடங்கும்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)

Skip to toolbar