எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் அறிவிப்பு. இந்த மாணவர் சேர்க்கை காட்டாங்குளத்தூர், இராமாபுரம், வடபழனி , டில்லி என்சிஆர் கசிகாபாட் , டில்லி என்சிஆர் சோனாபெட் அரியானா மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமராவதி ஆகிய அனைத்து வளாகங்களில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் பொதுவானவை.
எல்லா ஆண்டுகளும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது.சென்ற ஆண்டு இளநிலை பொறியியல் படிப்பிற்கு 1,50,000 மாணவர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் பிரத்யேக அம்சமாக எஸ்.ஆர்.எம் கல்விக் குழும பல்கலைக்கழகங்களில் இன்டர் டிசிப்பிலனரி எக்ஸ்பிரிமென்டல் லேன்னிங் (IDEAL). மாணவர்கள் எதிர்நோக்கும் பல்துறை படிப்புகள் அதற்கு ஏற்ற கல்வி முறை என அனைத்தும் மாணவர்களுக்கு ஒரு புதிய பாதையை அமைக்கிறது. மாணவர்கள் இந்த முறையில் மட்டும் அல்லாமல் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சிகள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு முன்னணி நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சென்று பயிலுதல் போன்ற கல்வி ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல செய்யப்பட்டுள்ளது.
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும் எஸ்.ஆர்.எம் ஜாய்ன்ட் என்டரஸ்ன் எனப்படும் SRMJEEE எனப்படும் கணினி வழி தேர்வு முறையில் இந்தியா முழுவதும் 125 மையங்களிலும் சில மத்திய மற்றும் கிழக்கு நாடுகளிலும் 2019 ஏப்ரல் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும். அனைத்து இந்திய வாழ் மக்கள் மற்றும் இந்தியர் அல்லாதவர் என அனைவரும் SRMJEEE 2019ற்கு விண்ணப்பிக்கலாம். என்.ஆர்.ஐ மாணவர்கள் SRMJEEE மூலம் விண்ணப்பித்து அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை பொறியியல் படிப்பில் நான்கு ஆண்டுகளும் 35விழுக்காடு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. என்.ஆர்.ஐ மாணவர்கள் நேரடியாக வெளிநாட்டு மாணவர் சேர்க்கை பிரிவின் மூலமும் நேரடியாக சேரலாம்.
ஆன்லைனில் விண்ணப்பக்கங்கள் அக்டோபர் 28,2018 ஞாயிற்றுக்கிழமை முதல் https://applications.srmuniv.ac.in

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பு கல்வி உதவித்தொகை, கட்டண சலுகைகள் , ஆராய்ச்சி உதவி , நிறுவனர் கல்வி கட்டண சலுகை என 100% கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகிய சலுகைகள் வழங்குகின்றன. அத்துடன் பள்ளி அளவில் முதல் நிலை மாணவர்கள் மற்றும் விளையாட்டில் சிறப்புடைய மாணவர்கள் என அனைவரும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது எஸ்.ஆர்.எம் குழுமம்.