மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட், என்சிடி பகுதி – 1 வெளியீடு

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட், என்சிடி பகுதி – 1 வெளியீடு, அக்டோபர் 24, 2018-ல் வெளியிடப்பட்டது!

வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.40% வரை*

ü தரக்குறியீடுகள் – “பிடபிள்யூஆர் ஏஏ+/நிலையானது” பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (பிரிக்வொர்க்) மற்றும் கேர் ஏஏ+/நிலையானது கேர் ரேட்டிங்ஸ் லிமிடெட் (கேர்)

ü 400 நாள்கள் முதல் 2,557 நாள்கள் வரை அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச முதலீடு ரூ. 10,000.

ü முதலில் வருபவர்களுக்கு, முன்னுரிமை என்கிற அடிப்படையில் என்சிடிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.^

சென்னை, 26 அக்டோபர், 2018: மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Manappuram Finance Limited ( “நிறுவனம்”), இந்தியாவில் தங்க அடமானக் கடன் வழங்கும் வணிகத்தில் (gold finance business) ஈடுபட்டுள்ள முக்கியமான வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் (NBFC) ஒன்றாகும். (ஆதாரம்: க்ரைசில் அறிக்கை). இந்த நிறுவனம், சிறு வாடிக்கையாளளுக்கு தங்க ஆபரண அடமானத்தின் பெயரில் குறுகிய கால கடன்களை தனிநபர்கள் மற்றும் வணிக தங்க கடன்களை (“தங்க கடன்கள்”)முதன்மையாக அளித்து வருகிறது.

இந்த நிறுவனம், பங்குகளாக மாறாத திரும்ப பெறக்கூடிய பாதுகாப்பான கடன் பத்திரங்களின் (secured redeemable Non-Convertible Debentures -NCD) முதல் பகுதியை அக்டோபர் 24, 2018 முதல் வெளியிட்டு இருக்கிறது. இந்த என்சிடி ஒன்றின் முக மதிப்பு ரூ. 1,000. மொத்தம் ரூ.10,000 மில்லியன் என்சிடிகள் வெளியிடப்படுகிறது. அடிப்படை வெளியீடு பகுதி – 1 மூலம் ரூ. 2,000 மில்லியன், கூடுதல் ஆதரவு மூலம் ரூ. 8,000 மில்லியன் (பகுதி 1 வெளியீடு அளவு) வெளியிடப்படுகிறது.

இந்த பகுதி 1 என்சிடி வெளியீடு நவம்பர் 22, 2018-ல் நிறைவு பெறுகிறது. வெளியீட்டை முன்னதாக நிறைவு செய்வது அல்லது நீடிப்பது குறித்து நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அல்லது என்சிடி வெளியீடு குழு முடிவு செய்யும்.