பன்னாட்டு  ஜவுளிக் கண்காட்சி

பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி

கோவை, அக்.27-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜனவரி-2019&ல் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி விழா நடைபெறுகிறது. இதற்க்கான சின்னம், இணையதளம், மடிப்பேடு மற்றும் விளம்பர குறும்படத்தினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் : இந்திய அளவில் தமிழ்நாடு ஜவுளித் தொழிலில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து, ஜவுளி வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. தமி;நாட்டின் பொருளாதாரத்தில் ஜவுளித் தொழில் மிக முக்கிய இடத்தினை வகிக்கிறது. கைத்தறி நெசவாளர்களின் நலன்களை பாதுகாப்பதுடன், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, நூற்பு மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் செயல்பாடு இன்றியமையாததாகும்.

இத்தொழில் சார்ந்துள்ள அனைத்து பிரிவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சரியான சூழலை ஏற்படுத்தவும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர், ஜவுளி வர்த்தகத் தொழில் மிகவும் சிறந்து விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த கோவையில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

ஜவுளி தொழில் கோவை மாவட்டம், இந்தியாவிற்கு முன்னோடிற்கு மாநிலமாக விளங்குகிறது. ஜவுளித் தொழில் அமைப்பினர், இத்தொழிலை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்த ஏதுவாக, இக்கண்காட்சியினை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில் : தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 14.06.2018 அன்று ‘ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூர், கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2019- ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27ம் தேதி முதல் 29ம் தேதி முடிய மூன்று நாட்கள் கோயம்புத்தூர், கோடிசியா அரங்கத்தில் பிரம்மாண்டமாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 27.01.2019 அன்று இக்கண்காட்சியினை துவக்கி வைக்கவுள்ளார்கள். இக்கண்காட்சிக்கென தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இக்கண்காட்சியில் 600 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. வெளிநாடுகளிலிருந்து 300 மேற்பட்ட இறக்குமதியாளர்கள் நுகர்வோர் கொள்முதல் செய்யும் நோக்கத்தோடு வருவகை தர உள்ளார்கள். நாம் எதிர்பார்க்கும் அளவைவிட அதிக அளவு கொள்முதல் செய்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்துள்ளார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியானது உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு அரசின் ஜவுளித்துறை, டெக்ஸ்புரோசில் மற்றம் பெடக்சில் அமைப்பிற்கு, கைத்தறி மற்றும் துணிநூல் சார்ந்த அலுவலர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநர் ச.முனியநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கனகராஜ், ஓ.கே.சின்னராஜ், திரு.வி.சி.ஆறுக்குட்டி, திரு.அம்மன் கே.அர்ச்சுணன், திருமதி.கஸ்தூரி வாசு, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் உப தலைவர் த.ராஜ்குமார், பருத்தி, ஜவுளி ஏற்றுமதி கழகம தலைவர் உஜ்வல் லஹோட்டி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் லீலீஜா சண்முகம் , தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ப.நடராஜ், விசைத்தறி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழக முன்னாள் தலைவர் எஸ்.துரைச்சாமி, கைத்தறி மற்றும் துணிநூல்துறை கூடுதல் இயக்குநர், முனைவர் க.கர்ணன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)