கோவை மாநகர் ஒரு முதன்மை மாநகராக விளங்குவதற்கு அதிமுக அரசு துணை நிற்கும்

கோவை மாநகர் ஒரு முதன்மை மாநகராக விளங்குவதற்கு அதிமுக அரசு துணை நிற்கும்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை மாநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக

கோவை க்கு வருகை புரிந்தார். அப்போது சிங்காநல்லூரில் பொதுமக்களிடையே

உரை யாற்றினார். அப்போது பேசியதாவது:

இன்றையதினம், நம்முடைய கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எண்ணிய எதிரிகளுடைய எண்ணங்கள் இன்றைக்கு தவிடு பொடியாகிவிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும், நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்க வேண்டும், தமிழகத்திலே வாழ்கின்ற மக்களுக்கு அத்தனை தேவைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செயலாற்றி, பேரறிஞர் அண்ணா கண்ட கனவை நனவாக்கி கிட்டத்தட்ட 6 முறை தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப் பேற்றார். உங்கள் ஆதர வைப் பெற்று சிறப்பான ஆட்சி செய்தார். அவரு டைய மறைவிற்குப் பிறகு சில எட்டப்பர்கள் எதிரி யோடு சேர்யது கொண்டு இயத இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். அத்தனையும் உங்களுடைய துணையோடு தவிடு பொடியாக்கினார்.

ரத்தத்தை வியர்வை யாக சிந்தி, தன் உடல் நலத்தையும் பொருட் படுத்தாமல் தமிழகத் தினுடைய அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சயதி த்து மீண்டும் தமிழகத்திலே எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்கினார்கள்.

சில சதிகாரர்கள் எதிரி யாய் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தோடு துணை கொண்டு நமக்கு எவ்வ ளவோ இயக்கத் திற்கும், ஆட்சிக்கும் இடையூறு செய்தார்கள், இந்த ஆட்சி கலைப்பதற்கு எவ்வளவோ திட்டம் தீட்டினார்கள். ஆனால் ஜெயலலிதா என்ற தெய்வம் பக்கபலமாக இருந்து நான் உருவாக்கிய இந்த ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது. ஆகவே, இந்த இயக்கத்தை உடைக்க முற்பட்டவர்களும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க முற்ப ட்டவர்களுக்கும், இறை வன் தகுந்த தண்ட னையை இப் பொழுது வழங்கியிருக் கிறான்.

இருபெரும் தலைவர் கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை நாம் கட்டிக் காப்போம். அந்த இரு பெரும் தலைவர் களுடைய ஆசியோடு நம்முடைய ஆட்சி சிறக்கும், கட்சி வலிமை பெறும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து சிறப்பான ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங் களுக்கும் நன்றி தெரிவித்து மிகத் திரளாக கலந்து கொண்டு என்னை வர வேற்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும், மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும், உங்கள் அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற் றுகின்ற விதமாக நமது அரசு செயல்படும், நீங்கள் எண்ணிய எண்ண ங்கள் அனைத் தையும் நிறை வேற்றி கோவை மாநகர் ஒரு முதன் மை மாநகராக விளங்கு வதற்கு அதிமுக அரசு துணை நிற்கும், அத்தனை திட்டங்களையும் நிறை வேற்றுவதற்கு பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)