ஹீரோ சைக்கிள் தென்னிந்தியாவில் வலுப்பெற சென்னையில் ஆறு ஷோரூம்கள் துவக்கம்

ஹீரோ சைக்கிள் தென்னிந்தியாவில் வலுப்பெற

சென்னையில் ஆறு ஷோரூம்கள் துவக்கம்
• தமிழ்நாட்டில் ஸ்டோர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
• சைக்கிள் வாங்குவோருக்கு புதிய அதிநவீன ஷோரூமில் தனித்துவமிக்க அனுபவங்கள்
• அனைத்து சைக்கிள் தேவைகளும் இங்கு பூர்த்தியாகின்றன. உடற்பயிற்சி முதல் சாகச பயணம் வரை, குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் சைக்கிள்கள்.

சென்னையில் சைக்கிள் ஆர்வலர்கள் இப்போது முதல் முறையாக ஈடுஇணையற்ற சிறப்பான அனுபவத்தை பெறலாம். தேசிய அளவிலான விரிவாக்கத்தில் அதிநவீன ஆறு சைக்கிள் ஷோரூம்கள் திறக்கப்படுகின்றன.
புதிய ஷோரூம்களில் பெரிய ஷோரூமை, சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த வேளச்சேரியில் ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனியின் சேர்மன் திரு. பங்கஜ் எம் முன்ஜால் துவக்கி வைத்தார். பிற ஐந்து ஷோரூம்களும், மிக முக்கிய குடியிருப்பு பகுதிகளான அண்ணாநகர், அசோக் நகர், நாவலுார் தெற்கு பகுதி மற்றும் திருவல்லிக்கேணி அருகில் உள்ள மெரினா பீச் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.

புதிய ஷோரூமை துவக்கி வைத்து திரு. பங்கஜ் எம் முன்ஜால் பேசுகையில், ‘‘இந்திய இளைஞர்களிடையே உடல் பயிற்சிக்காவும், பொழுதுபோக்கிற்காகவும் சைக்கிள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. புதியதாக சைக்கிள் வாங்க விரும்பும் இளைய தலைமுறையினர், பழமையான பாரம்பரிய சைக்கிள் கடைகளை விட்டு வித்தியாசமான அனுபவத்தை உணர விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்து வாகனங்களை விட, இளைஞர்களிடையே சைக்கிள் ஒரு முக்கிய அனுபவத்தை அளித்து வருகிறது. மிக முக்கிய உடற்பயிற்சி கருவியாகியுள்ளது. எனவே, புதியதாக சைக்கிள் வாங்க விரும்பும் இளைஞர்கள், பல்வேறு வகையான சைக்கிள்களுக்கு இடையே தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்ய வழிகாட்டுதல்களை விரும்புகின்றனர். ஹீரோ ஸ்பிரின்ட் ஸ்டோர், இதற்காகவே உருவானது. புதிய அதிநவீன ஷோரூம், அனைத்து விதமான சைக்கிள் வாங்கும் அனுபவத்தை தருகிறது. அனைத்து வகையான உடற்பயிற்சி முதல் சாகச பயணம் செய்யும் வீரர்கள் வரை பயன்படும் சைக்கிள்கள், குழந்தைகள் முதல் பெண்கள் வரை ஆர்வமுடன் சைக்கிள்களை அறிய முடியும். சைக்கிள் ஓட்டுவது, ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. தற்போது சென்னையில் சைக்கிள் ஓட்டும் இளைஞர்கள், இரண்டு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். துாய்மையான காற்றை சுவாசிக்க முடிவதில்லை; போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான்,’’ என்றார்.

நகர்ப்புற விரிவாக்கத்துக்கு ஏற்ப வணிக மேம்பாட்டிற்கு பங்குதாரரான ஜஸ்ட் பை சைக்கிள், ஹீரோ சைக்கிளுடன் கைகோர்த்துள்ளது. ஹீரோ ஸ்பிரின்ட் ஸ்டோர்கள், உலகின் பெருமளவில் சைக்கிள் உற்பத்தி செய்து வரும் நிறுவனமான ஹீரோ, வாடிக்கையாளர் விரும்பும் சைக்கிளை ஸ்டோரில் தருகின்றனர். இங்கு சைக்கிள் வெள்ளோட்டம் விடவும், பயிற்சி பெற்ற சைக்கிள் நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவும், விற்பனைக்கு பின் சேவையை பெறவும் வசதிகள் உள்ளன. தேசிய அளவிலான ஸ்டோர்களை ஒப்பிடும்போது சென்னையில் உள்ள ஸ்டோர்கள், பல்வேறு வகையான தேவைக்கு ஏற்ற சைக்கிள்களை கொண்டுள்ளன. உடற்பயிற்சி, சாகச பயணம், செயல்திறன் போன்றவைகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சைக்கிள்கள் இடம் பெற்றுள்ளன.

சைக்கிள் பயணம் ஒரு பொழுதுபோக்காக மட்டுமின்றி, உடற்பயிற்சி, ஒழுங்கு, சாகசம் மற்றும் மகிழ்ச்சிக்கானதாக உள்ளது. மாறி வரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நகர்ப்புறத்திலும், நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ளவர்களும் விரும்பி வருகின்றனர். இந்தியாவில் விற்பனையாகும் நான்கு சைக்கிள்களில் ஒன்று, செயல் திறன்மிக்க அல்லது பகுதி செயல் திறன் கொண்ட பைக் ஆக உள்ளது.
ஹீரோ சைக்கிள்கள், இந்தியாவில் ஒரு சைக்கிள் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்களிடையே சைக்கிள் கலாச்சாரத்தை உருவாக்க மாபெரும் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சர்வதேச அளவிலான சந்தையில் முன்னணி சைக்கிள் நிறுவனங்கள், விரிவாகி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப புதிய மாடல்களில் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சைக்கிள்களை அறிமுகம் செய்து வருகின்றன. உடற்பயிற்சிக்கு ஏற்ற சைக்கிளின் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்று வருகின்றன. இவற்றில் தற்போது ப்ளாக்பஸ்டர் வகையில், ஸ்பிரின்ட் ப்ரோ மற்றும் லேக்ட்ரோ எனப்படும் மின் சைக்கிளையும் வெளியிட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள ஹீரோ ஸ்பிரின்ட் ஸ்டோர் உடன் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவிலான ஸ்டோர்களின் எண்ணிக்கை 250. தமிழ்நாட்டில் 5 ஸ்டோர்கள் கோயம்புத்துாரிலும், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், தேனி, வந்தவாசி மற்றும் திருப்பத்துாரில் தலா ஒரு ஸ்டோர்களும் திறக்கப்பட்டுள்ளன.

எச்எம்சி பற்றி:
எச்எம்சி குழுமம் 1.2 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்டது. சர்வதேச அளவில் 10000 பேர் பணியாற்றுகின்றனர். ஹீரோ மோட்டார்ஸ், இசட்எப் ஹீரோ சேஸிஸ் சிஸ்டம்ஸ் பி லிமிடெட் மற்றும் முஞ்சால் கிரியு இன்டஸ்ட்ரீஸ், விருந்தோம்பல் நிறுவனங்களையும், சொகுசு வீடு அலங்கரிப்பு தயாரிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
1956ம் ஆண்டு நிறுவப்பட்ட ஹீரோ சைக்கிள்ஸ் லிமிடெட், உலகில் மாபெரும் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனம். ஆண்டுக்கு 7.5 மில்லியன் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் தொழிற்சாலை பஞ்சாப் லுதியானாவிலும், பிகாரில் உள்ள பிட்டா, உபி கஜியாபாத்திலும் உள்ளன. இலங்கையிலும் ஒரு தொழிற்சாலை உள்ளது.

இந்திய சைக்கிள் சந்தையில் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. நாடு முழுவதும் 3000 விநியோகஸ்கர்களை கொண்டுள்ளது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.

AD

Skip to toolbar