சுதா மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கோவையில் சுதா மருத்துவமனை என்கிற கருத்தரித்தல் மையம் ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் சாதனைப் பயணம் பல மைல்கற்களை தாண்டி தொடர்கிறது.

ஈரோட்டில் 28 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் சுதா டெஸ்ட் ட்யூப் பேபி சென்டர் தற்போது கோவை பாரதியார் ரோட்டில் உள்ள புதிய வளாகத்தில் மருத்துவ ஆலோசனை முகாம் காலை 8 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது. முகாமில் பங்குபெறும் தம்பதியனருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் அனைத்தும் இலவசம்.

முகாமில் சுதா மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், பிரபல கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர் டாக்டர் தனபாக்கியம், செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் எஸ்.பிரதீபா, ஆண் பாலியல் சிகிச்சை நிபுணர் குமாரசுவாமி ஆகியோர் பங்கேற்றனர். ஹார்மோன் சிகிச்சை, செயற்கை கருத்தரித்தல், கரு உறை நிலைப்படுத்துதல் போன்ற சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது

(கோவை நிருபர் ராஜ்குமார்)