மேல்நிலைத்தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது

கோவை புறநகர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில் எட்டிமடை 1-வது வார்டில் ரூ. 8.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்கவும், 2-வது வார்டில் ரூ. 12.50 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது, உடன் பேரூராட்சி செயலாளர் சேனாதிபதி, அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்