46வது  ஜவஹர்லால்  நேரு  அறிவியல்  கண்காட்சி

46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி

கோவை பள்ளிக்கல்வித்துறை, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சி முக்கியமாக இளம் விஞ்ஞான கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கும், உருவாக்குவதற்கும் நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் கோயம்புத்தூர் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் அய்யனன் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். இரத்தினம் கல்வி குழுமத்தின் தலைவர் மதன் செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பேராசிரியர் மாணிக்கம் அவர்கள், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr. முரளிதரன் கலந்து கொண்டனர். இந்த அறிவியல் கண்காட்சிக்காக 50 தலைமை ஆசிரியர்கள், 300 ஆசிரியர்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.

வேளாண்மை மற்றும் கரிம வேளாண்மை, சுகாதாரம் மற்றும் தூய்மை, வள மேலாண்மை, கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மற்றும் கணித மாதிரிகள் ஆகிய களங்களில் மாணவர்கள் காட்சிப்படுத்தினார்கள். அப்துல் கலாம் விருது, இளம் அறிவியலாளர் விருது ஆகிய விருதுகள் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டது.

அறிவியல் கண்காட்சியைத் தவிர, மாணவர்கள் கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்தாட்டம் மற்றும் கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்) போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் மற்றும் ரங்கோலி போன்ற நிகழ்வுகளும், பாரம்பரிய நடனப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும் நடைபெற்றது. வெற்றி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டது
(கோவை நிருபர் ராஜ்குமார்)