வெள்ளையனை எதிர்த்து போரிட்டு தேசம் காத்த மாமன்னர்களின் நினைவு பரிசுகளுக்கான போட்டிகள்

தமிழ்நாடு தேவர் விளையாட்டுக்கழகம் சார்பில் மாபெரும் வலுதூக்கும் போட்டி

கோவை இராமநாதபுரம் சாண்டே எம்.எம்.ஏ.சாண்டோ சின்னப்பதேவர் திருமண மண்டபத்தில் வெள்ளையனை எதிர்த்து போரிட்டு தேசம் காத்த மாமன்னர்களின் நினைவு பரிசுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் அம்மன் அடிமை சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஸ்ரீ வீரமாருதி தேகப்பயிற்சி சாலை மாரியப்பதேவர், தஞ்சாவூர் ராமச்சந்திரன், ராஜசேகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய வலுதூக்கும் சங்கத்தின் துணைத்தலைவர் ஆர்.முருகேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தேசிய பலசாலி, கோவை மாவட்ட வலுதூக்குபவர் சங்கத்தின் செயலாளர் உமாமகேஸ்வரி, செந்தில்குமார், மருது தம்பி, சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வலு தூக்குபவர் சங்கத்தின் தலைவரும், ராஜா டி.எம்.டி.கம்பி ராஜா , தமிழ்நாடு ஆணழகன் சங்கத்தை சேர்ந்த பவிழம் லிஜோ சுங்கத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். போட்டியை ஸ்ரீ வீரமாருதி தேகப்பயிற்சி சாலையின் தலைவர் மோகனசுந்தரம், கோவை மாவட்ட தேவர் விளையாட்டு கழகத் துணைத்தலைவர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட தேவர் விளையாட்டுக்கழகம் விழாக்குழு தலைவர் கல் டி.மணி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
(கோவை நிருபர் ராஜ்குமார்)