சிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம்

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம்

சிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து கோவை சிங்காநல்லூர் ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வரையிலான அனைத்து பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் இருந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது- அதேபோல் நேற்று (14.10.18) அன்று கோவை சிங்காநல்லூர் ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரளான ஐயப்ப பக்தர்களும், பெண்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதில் ஸ்ரீ மணிகண்டன் சபரிமலை யாத்திரை குழு, ஸ்ரீதர்மசாஸ்தா பூஜா கமிட்டி, ஸ்ரீ மணிகண்டன் யாத்திரை குழு, ஸ்ரீ சித்தி விநாயகர் மகரஜோதி யாத்திரை குழு நெசவாளர் காலனி, உட்பட 12 ஐயப்ப பூஜா கமிட்டியினர் பங்கேற்றனர். ஜெய்கணேஷ், மாரிமுத்து, கணேசன், மணிகண்டன், கதிர்வேல், வேணுகோபால், சேகர், செல்வராஜ், ராஜ், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)