தாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார்

குழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் கலை நிகழ்ச்சி

கோவை சரவணம்பட்டி புரோசான் மாலில் குழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பின்னணிப் பாடகர் கானா பாலா, தெற்கு ரோட்டரி சங்க டைரக்டர் லட்சுமணன், சகோதரி பவுண்டேசன் கல்கி சுப்ரமணியன், சரணாலயம் வனிதா ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கானாபாலா தாயைப் பற்றி ஒரு பாடல் பாடி அனைவரையும் அசத்தினார். பின்பு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் யோகா, நடனம், சிவன் பார்வதி நடனம் உட்பட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு எமரால்டு சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டர் கே.ஸ்ரீனிவாசன் ரூ.25,000 மதிப்புள்ள காசோலையை வழங்கினார்.

Skip to toolbar