புதிய ஆயக்கட்டு பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு.

கோவைமாவட்டம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று ஆழியார் அணையில் இருந்து சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொள்ளாச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு தண்ணீர் மலர்தூவி
தண்ணீரை
திறந்து விட்டனர் இதன் மூலம் பொள்ளாச்சி வாய்க்கால் பகுதியில் உள்ள 11 ஆயிரத்து 616 ஏக்கர் பாசனமும் வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் உள்ள 5623 ஏக்கரும் சேத்துமடை கால்வாய் பகுதியில் உள்ள 2515 ஏக்கரும் ஊட்டுக் கால்வாய் பகுதியில் உள்ள 2,362 ஏக்கர் மொத்தம் 22 ஆயிரத்து 116 ஏக்கர் பாசனம் பயன்பெறும் வகையில் வினாடிக்கு 320 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Skip to toolbar