ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா

ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா

ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா மற்றும் ஸ்ரீ விஸ்வ பிரம்ம மஹாயாகம் கோவை கணபதி ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் பிரம்மஸ்ரீ திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். தலைவர் பிரம்மஸ்ரீ கணபதி, செயலாளர் பிரம்மஸ்ரீ நரேஷ்குமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் முன்னேற்ற சங்கம் காப்பாளர் பிரம்மஸ்ரீ கே.பி.சுப்பையன் தலைமை தாங்கினார். ஸ்ரீ நாகமலை நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை பிரம்மஸ்ரீ விஸ்வகர்ம ஜகத்குரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தவத்திரு.பிரம்மஸ்ரீ பாலமுருகன் அடிமை நீலமலை சித்தர் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பொருளாளர் பிரம்மஸ்ரீ பாலமுருகன்,

நிர்வாக குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ செல்லபாண்டியன், கௌரவ தலைவர், ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை பிரம்மஸ்ரீ பாலசுப்ரமணியம், துணைத்தலைவர் ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை பிரம்மஸ்ரீ சக்திவேல், ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை துணைச் செயலாளர் பிரம்மஸ்ரீ கணேசன், ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை கௌரவ ஆலோசகர் பிரம்மஸ்ரீ அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.