வண்ணார் குல மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம்

வஞ்சிக்கப்பட்ட வண்ணார் குல மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம்

கோவை மாவட்ட தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பாக கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட செயலாளர் ப.கருப்புசாமி தலைமை தாங்கினார்.

கோவை மாவட்டத் தலைவர் பிச்சைமுத்து வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் மணிபாபா, தந்தை பெரியார் திராவிட கழகம் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் செல்வராஜ், மாநில சட்ட ஆலோசகர் கதிர்வேல், கோவை மாவட்ட டி.வி.பி.சட்ட ஆலோசகர் ராக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வண்ணார் சமூகத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து உள் இடஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வலியுறுத்தியும், சலவை தொழிலாளர்களுக்கு நவீன சலவைக்கூடம் கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும், சாதி வாரிய மக்கள் தொகையை கணக்கெடுத்து விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், இலவச வீட்டுமனைப்பட்ட வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Skip to toolbar