நடிகர் சங்கத்தின் நான்காம் ஆண்டு விழா,

கோவை நடிகர் சங்கத்தின் நான்காம் ஆண்டு விழா,

கோவை நடிகர் சங்கத்தின் நான்காம் ஆண்டு விழா, கோவை நடிகர் சங்கத்தின் நான்காம் ஆண்டு விழாவும்,புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கோவையில் நடிகர்கள், நாடக நடிகர்கள், துணைநடிகர்கள், மேடை நடிகர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை ஒன்றிணைத்து கோவை நடிகர் சங்கம் என்னும் பெயரில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பல திறமை வாய்ந்த கலைஞர்களின் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளுடன், புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக “என்நிலம்“ உரிமையாளர் செந்தில்குமார், சின்னத்திரை நடிகர் கோப்ரா பிரதீப்குமார் மற்றும் கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)

Skip to toolbar