ஓவியப்போட்டி 2 வயது முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்

கல்ச்சுரல் க்ரேடல் சார்பில்

ஓவியப்போட்டி

கோவை கல்ச்சுரல் க்ரேடல் சார்பில் ஜென்னி கிளப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டியினை டாக்டர் காயத்ரி நடராஜன், சமர்ப்பணா டான்சர் அகாடமியை சேர்ந்த சித்ரா நாயர், டாக்டர் சந்தோஷ், ஆர்த்தி ராஜசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இது குறித்து கல்ச்சுரல் க்ரேடல் சந்திரசேகர் கூறும்போது, இப்போட்டியில் 2 வயது முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் இயற்கை, கடவுள்கள், பறவைகள், பூக்கள் கொண்ட படங்களை வரைந்து காட்டினர். இதில் 68 குழந்தைகளும், 250 மாணவர்களும் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 2 மணிநேரம் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Skip to toolbar