58 வயதான ஒரு பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது! அப்பல்லோ மருத்துவமனை

அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்ட அரிதான மூளை அறுவைச் சிகிச்சை 58 வயதான ஒரு பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது!

சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த மருத்துவமனை குழுமமாக அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு அங்கமான ஓஎம்ஆர் சாலையில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், கார் விபத்தின் காரணமாக மூளையில் பலத்த காயம் மற்றும் மண்டையோட்டின் எலும்புகளில் முறிவுகளால் பாதிக்கப்பட்ட 58 வயதான பெண்மணிக்கு அறுவைச் சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றியது. இதுபோன்ற அரிய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
கார் விபத்துக்கு பிறகு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை பெற்ற திருமதி. லலிதா சுயநினைவுக்கு வந்தபோதிலும், பார்ப்பவை இரண்டாக தெரியும் பிரச்னைகளைக் கொண்ட இரட்டைப் பார்வை மற்றும் வழக்கம் போல் காண்பவற்றை சரியாக பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டார். மேலும் அவரது 2 கண்களும் சிவந்து, வீக்கமடைந்து, அதிக நீரைச் சுரந்துகொண்டு அவருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இதைத்தொடர்ந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் சேருமாறு பரிந்துரைக்கப்பட்டார். அங்குள்ள கண்சிகிச்சை நிபுணர்கள் அவரது கண்களை தீவிரமாக சோதித்துப் பார்த்தனர்.
அவரது கண்களின் வெண்படலம் சிவந்திருப்பது, அதிலுள்ள வீக்கம் மற்றும் கண் விழியில் இருந்து கேட்கக்கூடிய சத்தம் (கண்விழியின் மீது கேட்கப்படும் இந்த சத்தத்தை ஸ்டெதஸ்கோப்பை வைத்து கேட்கும்போது மேலும் துல்லியமாக கேட்க முடிந்தது) ஆகியவற்றைப் பார்த்த ஓஎம்ஆர் அப்பல்லோ ஸ்பெஷாலிடி
மருத்துவமனையின் சீனியர் கன்சல்டண்டும், நியூரோ சர்ஜன் மற்றும் இண்டர்வென்ஷனிஸ்டுமான டாக்டர். ஜாய் வர்கீஸ் ( Dr.Joy Varghese, Senior Consultant, Neuro Surgeon & Interventionalist, Apollo Speciality Hospitals, OMR), கரோடிட் காவெர்னஸ் பிஸ்டுலா (carotid cavernous fistula) என்ற பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார். குறிப்பாக கண்விழியின் அசாதாரண புடைப்புகளைப் பார்த்ததும் (exophthalmos) அவரது இந்த சந்தேகம் அதிகரித்தது. மருத்துவ மற்றும் கதிரியக்க சோதனைக்கு பின்னர் அவர், ‘பைலேட்டரல் டைரக்ட் கரோடிட் காவெர்னஸ் ஃபிஸ்டுலா’ (bilateral direct carotid cavernous fistula ) என்ற தமனி மற்றும் நரம்புகள் ஆகியவை கண்கள் மற்றும் மூளையின் நரம்புகளில் அழுத்தத்தை அதிகரித்து இரண்டையும் பாதிக்கச் செய்யும் பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவக் குழுவினர் விரைவிலேயே அவரது பிரச்சினையை துல்லியமாக கண்டறிந்து அவரைக் காப்பாறியது.

ஓஎம்ஆரில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் டாக்டர் ஜாய் வர்கீஸ் மற்றும் அவரது குழுவினர், டிரான்ஸ் ஆர்டீரியல் எம்பலைசேஷன் என்ற அறுவைச் சிகிச்சையைச் செய்து அவரைக் காப்பாற்றினர்.
‘கரோடிட் கவெர்னஸ் பிஸ்டுலா’ (carotid cavernous fistula) என்பது கழுத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தை அனுப்பும் தமனிக்கும் (carotid artery), காவெர்னஸ் சைனஸ் (cavernous sinus) என்று அழைக்கப்படும் கண்களின் பின்புறமுள்ள நரம்புகளுக்கும் இடையிலான அசாதாரண இணைப்பாகும். கண்களின் பின்புறம் உள்ள நரம்புகள் சாதாரணமாக கண்கள் மற்றும் மூளையில் இருந்து ரத்தத்தை எடுத்து காவெர்னஸ் சைனஸ் என்ற சிறிய சானலின் வழியாக இதயத்துக்கு அனுப்பும். எனினும் காவெர்னஸ் சைனஸுக்கு அருகில் உள்ள கரோடிட் தமனி, இந்த விபத்தின் மூலம் கிழிந்திருந்தது. இதன் மூலம் தமனிக்கும் கவேர்னஸ் சைனசுக்கும் (cavernous sinus) இடையே அசாதாரண இணைப்பு ஏற்பட்டு ( கரோடிட் கவேர்னஸ் பிஸ்டுலா (carotid cavernous fistula) எனும் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. தமனிக்கும் நரம்புகளுக்கும் இடையிலான இந்த அசாதாரண இணைப்பால் கண்விழிக்குள்ளும், மூளையிலும் இருக்கும் நரம்புகள் அழுத்தப்பட்டு இரு உறுப்புகளும் பாதிக்கப்படும் நிலையில் இருந்தன.
இந்த அறுவைச் சிகிச்சை பற்றி கூறிய ஓஎம்ஆர் அப்பல்லோ ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் டாக்டர் ஜாய் வர்கீஸ் மற்றும் அவரது குழுவினர் (Dr Joy Varghese and team at Apollo Speciality Hospitals, OMR), “தமனிகளுடன் ஒப்பிடும்போது நரம்புகள் சிறிய சுவர்களால் ஆனவை. எனவே தமனிக்கும் நரம்புகளுக்கும் இடையிலான அசாதாரண இணைப்பால் ரத்தப்போக்கு ஏற்படுவதுடன் ‘ஆர்டெரியோவெனஸ் ஃபிஸ்டுலா’ (arteriovenous fistula) என்ற பிரச்சினையும் ஏற்படும். இந்த விபத்தின் மூலம் ஃபிஸ்டுலா ஏற்பட்டு தமனி மற்றும் நரம்பு பகுதிகளில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருந்தது. நரம்புகளில் ஏற்பட்ட அழுத்தத்தால் அவை பெரிதாகி கண்களை வீங்கச் செய்ததுடன் பார்வைச் சக்தியையும் பாதித்திருந்தது” என்றனர்.

Skip to toolbar