உபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை

உபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை

கோவை, அக்.3&

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் “உபகிரஹா” மாணவர் சங்கம் “ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள்” என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மேலாண்மை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

EX-IM SHIPPING SERVICES நிர்வாக இயக்குனர் சைஃபுதீன்கோவை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். SVPITM இயக்குனர் முனைவர் சி. ரமேஷ்குமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலாண்மை துறைத் தலைவர் டாக்டர்.வின்ஸ்டன் பிரவீன்ராஜ், SVPITM மாணவர்களை இது போன்ற நிகழ்வுகள் மேலும் நடத்த ஊக்கப்படுத்தினார். சைஃபுதீன் கப்பல் மற்றும் வானூர்தி சேவையில் எவ்வாறு ஆவணங்களை கையாள்வது என்பதையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் பற்றி விவரித்தார். இதில் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தயும் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகள் கூறி பயிற்சியும் அளித்தார். இப்பயிற்சி எதிர்காலத்தில் தொழில் மற்றும் ஏற்றுமதித் துறையில் பணியாற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் விருந்தினர் உடனான கேள்வி பதில் உரையாடல்களும் நிகழ்ந்தன.