ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி தேசிய படை மாணவர்கள் சாதனை

அகில இந்திய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கங்களை வென்று

-ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி தேசிய படை மாணவர்கள் சாதனை

கோவை, அக்6

கோவை, பீளமேட்டில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் தமிழரசன் மற்றும் ஆதிவீர புத்திரன் ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். தமிழ்நாட்டில் கோவையில் தேர்வாகிய இவர்களுக்கு அப்பள்ளி நிர்வாகம் பாராட்டி பெருமைப்படுத்தியது.

முதலில் நடைபெற்ற தல்சைனிக் தேர்வு திருச்செங்கோடு, ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று இண்டர் குரூப் போட்டியின் மூலம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கங்களை பெற்ற இவர்கள் அடுத்த தகுதி சுற்றுக்கு இடம்பெற்றனர். பின்னர், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழரசன் மற்றும் ஆதிவீர புத்திரன் ஆகியோர் தேர்வாகி டெல்லியில் 12 நாட்கள் நடைபெற்ற அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், நிக்கோபார் திவுகள் சார்பாக 6 தேசிய மாணவர் படை மாணவர்கள் ஷனாப்பிங் மற்றும் குரூப்பிங் போட்டிக்கு தேர்வு பெற்றனர். அதில் தமிழ் நாட்டின் ஷனாப்பிங் போட்டிக்கு ஆதி வீரபுத்திரன் மற்றும் குரூப்பிங் போட்டிக்கு தமிழரசனும் தேர்வாகி தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அகில இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கும், பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

விருது பெற்ற தேசிய மாணவர் படை மாணவர்களை அப்பள்ளியின் தாளாளர் ஜி கே விஜயகுமார், பள்ளி நிர்வாக அலுவலர் பிரேமா, தலைமையாசிரியர் தேவராஜன், மாணவர் படை ஆசிரியர் குமரன், இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர். கோவை மாவட்டத்திலிருந்து அகில இந்திய துப்பாக்கி சூடுகள் போட்டிக்கு தமிழரசன் மற்றும் ஆதி வீரபுத்திரன் ஆகிய இருவர் மட்டுமே தேர்ச்சி அடைந்து பதக்கங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Skip to toolbar