உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

பிங்க் மாதத்தை முன்னிட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில்

அக்.1 முதல் 31 வரை இலவச மேமோகிராம்

பிங்க் மாதம் என்றழைக்கப்படும் அக்டோபர் மாதம் வருடம்தோறும் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தி நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனருமான தலைமை புற்றுநோய் நிபுணர் டாக்டர் பா.குகன் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். அது அனிமேட்டட் எனப்படும் அசைவூட்டப்பட்ட காணொளி ஆகும். இதன் வழியாக மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு எளிதாக சென்றடையும். இந்தக் காணொளியில் மார்பக புற்றுநோய் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், மார்பகப் புற்றுநோய்க்கான பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் உட்பட 9 சிறிய பகுதிகளாக பிரித்துக் கொடுத்துள்ளார். இதற்கான இணையதளம் www.breastcancersrior.com என்ற இணையதளத்தை கொண்டு இந்த அனிமேட்டர் வீடியோவை காணலாம்.

யார் வேண்டுமானாலும் எந்த சந்தேகத்திற்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை குறித்த சந்தேகங்களுக்கு 4389797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டாக்டர் குகன் கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு கையேடுகளை நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட பல மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இது தவிர அக்டோபர் 1 முதல் 31 வரை மார்பக புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச மேமோகிராம் செய்து தரப்படும். அக்டோபர் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மாவட்ட துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் தாளாளர் லஷ்மி நாராயணசாமி, கார்த்திகேஷ், உட்பட பலர் இருந்தனர்

Skip to toolbar