மிஸ்டர் கோயம்புத்தூர் 2018

கோயம்புத்தூர் ஜிம் & பிட்னஸ் ஓனர் அசோசியேஷன் சார்பில் மிஸ்டர் கோயம்புத்தூர் 2018 நடைபெற்றது. இது குறித்து செகரட்டரி பிரேம் கூறும்போது, கோவையில் ஜிம் பிட்னஸ் பாடி பில்டர்கள் மிகக் குறைந்த அளவில் இருப்பதாலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இரண்டாவது வருடமாக இந்த பாடி பில்டர் நிகழ்ச்சி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாஸ்டர், சீனியர், ஜூனியர், என மூன்று பிரிவுகளாக நடந்த இந்தப் போட்டிகளில் மாஸ்டர் பிரிவுகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக பிரிட்ஜ், மற்றும் வாஷிங் மெஷின், சீல்டு போன்றவை வழங்கப்பட்டது.

ஜூனியர் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் முதல் பரிசாக வழங்கப்பட்டது. சென்ற முறை இதே இடத்தில் நடந்த போட்டிகளில் 270 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டில் 350 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது இரவு 10 மணி வரை நடைபெற்றது. பின்னர் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு gym and fitness owners association secretary பிரேம் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் gym and fitness ஓனர் அசோசியேஷன் சங்க தலைவர் டேனியல் ஸ்டீபன், மற்றும் ஜாயின் செக்ரட்டரி சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)

Skip to toolbar