சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு கோவை கிளையின் சார்பில் ஹேக்கத்தான் 2018

சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு கோவை கிளையின் சார்பில் ஹேக்கத்தான் 2018

மத்திய அரசின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் மூலம் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகும் வாய்ப்பை பெறலாம்.

தொழில்நுட்ப ஆர்வலர்களை ஒரே இடத்தில் திரளச்செய்து அவர்களை மென்பொருள், செயலி போன்றவற்றை உருவாக்கத் தூண்டும் போட்டி ஹேக்கத்தான் எனப்படுகிறது. இந்திய அரசின் 28 துறைகளில் உள்ள சில பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2017 என்ற போட்டியை மத்திய அரசு துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களை புதிய தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் உருவாக்க ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

கோவை மாநகரம் தற்போது அனைத்து துறைகளிலும் மிகப்பெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் மக்கள் தொகைப் பிரச்னையும் பல்வேறு சிக்கல்களையும், வாகன நெரிசல் ஆகிய பிரச்னைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு தீர்வு காணும் விதமாக கோவை ஜி.ஆர்.டி.கல்லூரியில் ஹேக்கத்தான் 2018 எனும் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 100 அணிகளாக 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கல்லூரி மாணவர்கள், பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ரோபோட்டிக், மெஷின், லேர்னிங் மற்றும் ஐ.ஓ.டி.என்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோவை நகரின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. நிறைவு நாளான 30.9.18 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மருத்துவ பரிசோதனை தொழிலில் உள்ள தைரோகேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் வேலுமணி பங்கேற்று பேசினார். நகரின் பிரச்னைகளை தீர்க்க தீர்வுகளை உருவாக்கி பரிசுகளை வென்றவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

நிறைவு விழாவில் சர்வதேச தொழில்முனைவோர் கோவை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் வரவேற்று பேசும்போது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு காண இளைய தலைமுறை காட்டிய ஆர்வம் பாராட்டுக்குரியது. இது போன்ற உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க விவாதங்கள் நடந்துள்ளன. கோவை டை அமைப்பானது அந்தந்த தொழில்துறைகளில் பிரச்னைகளை தீர்க்க ஊக்கப்படுத்தி வருகிறது. தொழில் அதிபர்களை சந்திக்க வைத்து, பல்வேறு தீர்வுகளை காண டை அமைப்பு உதவி வருகிறது என்றார்.

விழாவில் வருமான வரித்துறையின் கூடுதல் பிரிவு இயக்குனர் என்.செந்தில்குமார் ஐ.ஆர்.எஸ், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், கருத்தரங்கின் தலைவர் டாக்டர் செல்வக்குமார், கோகுல், டை அமைப்பின் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர்பங்கேற்றனர். (கோவை நிருபர் ராஜ்குமார்)

Skip to toolbar