தென்னிந்திய மகாஜன சங்கத்தின்  முப்பெரும் விழா

கோவை கணபதியில் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் தலைமை தாங்கி சிறப்பு பேருரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார்.

செல்லதுரை, சுந்தரம், சம்பத், நாகராஜன், செங்குட்டுவன், இராமகிருட்டினன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்கள். விழாவினை திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஆண்டவர் இராமசாமி, தென்னிந்திய மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.திருவேங்கடசாமி, கணபதி எஸ்.ஈ.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் எஸ்.குழந்தைவேல், கோவை மாவட்டத்தின் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் எ.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் மனிதநேய மாண்பாளர் விருதினை விளாங்குறிச்சி அமாருண் பவுண்டரி மேனேஜிங் பார்ட்னர் என்.விஸ்வநாதன், ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இரா.சுகுமார், கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் ஆர்த்தோ ஸ்பெசலிஸ்ட் டாக்டர் லெனின்பாபு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழா நிறைவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

(கோவை நிருபர் ராஜ்குமார்)

Skip to toolbar