இளம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற “ஹரிஷ் கல்யாண் “

ளம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற

“ஹரிஷ் கல்யாண் “

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளிவந்த “பியார் பிரேமா காதல்” படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வெளியிட இருக்கிறார்.

“பியார் பிரேமா காதல்” பட வெற்றியை தொடர்ந்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஹரிஷ் கல்யாண் தற்போது விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர்இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். லே-லடாக்கில் இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

“பியார் பிரேமா காதல்” வெற்றியை தொடர்ந்து பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஹரிஷ் கல்யாணை வைத்து படம் இயக்க, தயாரிக்க ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

Skip to toolbar