ஜீ தமிழ் குடும்ப விருதுகள் அறிமுக விழா 2018

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக “ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா 2018” – ஜீ தமிழ் திறமையாளர்களை கவுரவிக்கும் விழா

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜீ தமிழ் தொலைக்காட்சி, தலைசிறந்த பொழுதுபோக்கு ஊடகமாக தமிழக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. நேயர்களின் பேராதரவுடன் ஜீ தமிழ் தொலைக் காட்சியில் முதன்முறையாக “ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2018” விழா விமர்சையாக நடைபெற உள்ளது. ஜீ தமிழ் உதயமானதன் பத்தாம் ஆண்டை முன்னிட்டு, ஜீ தமிழின் மகத்தான வெற்றிகளுக்கு துணை நின்ற திறமையாளர்களை கவுரவிக்கும் பொருட்டு விருது விழா நடைபெற உள்ளது. ஜீ தொலைக்காட்சி குழுமத்திற்கான தென்னிந்திய பிராந்திய தலைவர் திரு. சிஜு பிரபாகரன் அவர்கள் விருது விழா கோப்பையை இன்று அறிமுகம் செய்ய உள்ளார். இந்நிகழ்வில், புரோகிராமிங் ஹெட் திரு. தமிழ்தாசன், நடிகை பிரியாராமன், நடிகர் ஸ்ரீகுமார், தொகுப்பாளினி அர்ச்சனா இயக்குனரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் மிஸ்டர் அன்டு மிஸ்ஸஸ் கிலாடிஸ், ஜுனியர் சூப்பர்ஸ்டார்ஸ், சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, பூவே பூச்சூடவா உள்ளிட்ட நெடுந்தொடர்களும் தமிழக மக்களின் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளன. ஜீ தமிழின் அபார வளர்ச்சியை பறைசாற்றவும், அதற்கு உறுதுணை நின்ற திறமையாளர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 விழா, அக்டோபர் 13ம் தேதி வெகு விமர்சையாக நிகழ உள்ளது.
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2018 விழாவின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜீ தொலைக்காட்சி குழுமத்திற்கான தென்னிந்திய பிராந்திய தலைவர் திரு. சிஜு பிரபாகரன் அவர்கள் பேசுகையில், தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் புதுமையான நிகழ்ச்சிகளை கடந்த 10 ஆண்டுகளாக ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ஜீ தமிழ் திறமையாளர்களை கவுரவிக்கும் இந்த மாபெரும் விருதுகள் விழா கொண்டாட்டத்தில் நேயர்கள் பங்கேற்க வருமாறும் அழைப்பு விடுத்தார். வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு ஊடமாக ஜீ தமிழ் பெருமை பெற இவ்விருது விழா துணைநிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜீ தமிழ் குடும்பம் 2018 விருதுகள் விழாவில் கீழ்க்கண்ட பிரிவுகளில் திறமையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.
விருப்பமான நடிகர்
விருப்பமான நடிகை
விருப்பமான வில்லி
விருப்பமான ஜோடி
விருப்பமான தொகுப்பாளர்
விருப்பமான நெடுந்தொடர்
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை
சிறந்த ஜோடி
சிறந்த தொகுப்பாளர்
சிறந்த தொகுப்பாளினி
சிறந்த நெடுந்தொடர்
சிறந்த வில்லன்
சிறந்த காமெடியன்
சிறந்த நடுவர்
சிறந்த குழந்தை நட்சத்திரம்
பிரபலமான மாமியார்
பிரபலமான மருமகள்
பிரபலமான அப்பா
பிரபலமான அம்மா
சிறந்த ரியாலிட்டி ஷோ கலைஞர்
சிறந்த துணை நடிகர்
சிறந்த துணை நடிகை
சிறந்த தொகுப்பாளர் ஜோடி
சிறந்த ரியாலிட்டி ஷோ
சிறந்த நெடுந்தொடர்
சிறப்பு விருது
நேயர்களின் வாக்குகள் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நேயர்கள் தங்களை கவர்ந்த நட்சத்திரங்களை தேர்வு செய்ய, அவர்களுக்கு உரிய செல்போன் எண்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும். ஜீ ஃபைவ் ஆப் மற்றும் வெப்சைட்டிலும் வாக்களிக்கலாம். கீழ்க்கண்ட ஊர்களில் வலம்வரவுள்ள எங்களின் ஜீ தமிழ் வாகனத்திலும் நேயர்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.

ஜீ தமிழ் வாகனம் வரும் ஊர் கள்:
சேலம்
திண்டுக்கல்
கடலூர்
தேனி
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
பொள்ளாச்சி
திருப்பூர்
ஈரோடு
பாண்டிச்சேரி
மதுரை
கோயம்புத்தூர்
திருச்சி
திருநெல்வேலி.

மிஸ்டு கால் வாயிலாக பெரும்பான்மையான வாக்குகள் பெறும் நட்சத்திரங்களுக்கு விருப்பத்திற்குரிய விருதுகள் பிரிவில் விருது வழங்கப்பட உள்ளது. மிஸ்டுகால், ஜீ ஃபைவ் ஆப் மற்றும் ஜீ தமிழ் வாகனத்தில் நேயர்கள் பதிவு செய்யும் வாக்குகள் அடிப்படையில் ஏனைய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அக்டோபர் 13ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2018 விழா விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவிற்கான நுழைவுச் சீட்டை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெற்றுக்கொள்ளலாம். முகவரி : நம்பர்.33பி, ஒலிம்பியா பிளாட்டினா, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை-32

Skip to toolbar