கோவை பூம்புகாரில் கொலுபொம்மை கண்காட்சி விற்பனை

கோவை பூம்புகாரில் கொலுபொம்மை கண்காட்சி விற்பனை

கோவை,செப்.21
கைவினப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம், 1973ல் துவக்கப்பட்டு, தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கண்காட்சி குறித்து மேலாளர் போஸ் கூறும்போது : ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப் போல இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு “கொலு பொம்மைகள் ” என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை 20.09.2018 முதல் 20.10.2018 முடிய தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியினை கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமிநாராயணசுவாமி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கண்காட்சியில் மரபாச்சி பொம்மைகள் அஷ்டலக்ஷ்மி, தசாவதாரம், ராமர்செட், கல்யாணசெட், கடோத்கஜன் செட், பக்த பிரகலாத பட்டாபிஷேக செட், கின்¢கெட் செட், கிருஷ்ணலீலை செட், கோபியர் செட், ஜல கின்டை, ரங்கமன்னார், உலகலந்தபெருமாள், ராகு கேது செட், காவடி செட், பார்க் செட், உழவன் செட், லக்ஷ்மி நரசிம்ஹர் செட், ஆழ்வார் செட், கஜேந்திர மோக்ஷம், ஆறுபடைவீடு, தக்ஷிணாமூர்த்தி, காமாக்ஷி பூஜை, கிணறு செட், சிங்கராஜா, ஔவையார், பொய்கால் குதிரை செட், குருவாயூரப்பன், கச்சோ செட், கீதோபதேசம், கோவில் மற்றும் வீடு மாதின்¢கள், கொலு அலங்கார பொருட்கள், கொலுபடிகள், பரிசு பொருட்கள் மற்றும் கொலு அமைக்க தேவையான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.

அதுமட்டுமின்றி கண்காட்சியில் பண்டைய காலத்து விளையாட்டுக்களான நொண்டி விளையாட்டு, தாயம், கில்லிதாண்டு, பட்டம் விடுதல் உட்பட பழமை வாய்ந்த விளையாட்டுப் பொருட்கள் மாதிரி கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், FOAM SHEET – ல் செய்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மருதமலை கோபுரம், டவுன்ஹால், மதுரை மீனாட்சி அம்மன், தஞ்சாவூர் கோபுரம், திருச்சி மலைக்கோட்டை, பழனிமலை கோவில், ரெயின்போ அபார்ட்மென்ட் உட்பட பல மாதிரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் பல விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சி மூலம் ரூபாய் 50.00 இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

(நிருபர் கோவை ராஜ் குமார்)

Skip to toolbar