ஈசா பொறியியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா – ARJUNA TV

ஈசா பொறியியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா

கோவை ஈசா பொறியியல் கல்லூரியின்
6வது பட்டமளிப்பு விழா
கோவை,செப்,16-
கோவை பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில், 6வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி, பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்து 156 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி தாளாளர் டி.ஈ.சுஜாதா ஈஸ்வரமூர்த்தி, தலைமை செயல் அலுவலர்கள் டி.ஈ.அஜித், டி.ஈ. ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி அனைவரையும் வரவேற்று, கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கற்பகம் உயர்கல்வி துறை துணை வேந்தர் சுடலைமுத்து கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் பேசிய தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி பேசுகையில், மாணவர்கள் அனைவருக்கும் உங்களின் வாழ்வின் முதல் வெற்றியாக கருத வேண்டும் என்றும், பல தகவல்களைஉள்ளடக்கிய இந்த உலகில் தகவல்களை சேகரித்து, திறமைகளை வெளிக்கொண்டு, இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பட்டங்களை பெற்று கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி உறுதி மொழியினை வாசித்தார். மாணவர்கள் உறுதி மொழியினை எடுத்து கொண்டனர். விழாவில் அண்ணா பல்கலைகழக 16வது தரசான்றிதழ் பட்டத்தை எம். இ., தகவல் தொழில்நுட்பம் துறை மாணவி சமனா பெற்று கொண்டார். மேலு‌ம் கல்லூரியின் சார்பாக ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இளங்கலை பட்டப் படிப்பில் மெக்கானிக்கல் பிரிவில் 58 பேருக்கும், சிவில் பிரிவில் 23 பேருக்கும், கணினி அறிவியல் பிரிவில் 10 பேருக்கும், EEE பிரிவில் 11 பேருக்கும், இசிஇ பிரிவில் 17 பேருக்கும், பி.டெக் ஐடி பிரிவில் 2 பேருக்கும், முதுகலை பட்டப் படிப்பில் ஸ்டக்சரில் இன்ஜினியரிங் பிரிவில் 10 பேருக்கும், கட்டிடம் மற்றும் நிர்வாகம் பிரிவில் 3 பேருக்கும், கணினி பிரிவில் 4 பேருக்கும், தகவல் நுட்பம் பிரிவில் 11 பேருக்கும், பவர் எலக்ட்ரானிக் பிரிவில் 3 பேருக்கும், தயாரிப்பு பொறியியல் பிரிவில் 1 நபருக்கும், எம் பி ஏ பிரிவில் 3பேருக்கும் என அனைத்து துறைகளிலும் உள்ள மொத்தம் 156 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.
(கோவை நிருபர் ராஜ்குமார்)

tttttttt