IYA – பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம். 2-ம் ஆண்டு துவக்கவிழா

IYA – பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம்.
2-ம் ஆண்டு துவக்கவிழா
கோவை,செப்.16-

ஆள் பாதி, ஆடை பாதி என்பதெல்லாம் அந்தக் காலம். ஆடைதான் இன்று ஒருவரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெண்களின் ஆடைகள் என்றால் சொல்லத் தேவையில்லை. இழைகளே தெரியாத அளவுக்குக் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் கோலோச்சுகின்றன. திருமணம், திருவிழா, பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்ற பிரத்யேகமான உடைகள் கிடைக்காதா என்று ஆதங்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் அந்த ஆதங்கத்தையே தன் அடையாளத்துக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இடமாகத் திகழ்கிறது கோவை ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே அமைந்துள்ளது iya எனும் பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம்.
இந்த ஆடையகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா 12.09.18 அன்று நடைபெற்றது. கோவை மாநகரத்தை சேர்ந்தவர் ப்ரியதர்ஷினி. ஆர்.எஸ்.புரத்தில் பெயர் சொல்லும் டிசைனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : “டிசைனர் ஆடைகள் என்றாலே வட இந்தியாதான் என்ற நிலையை மாற்றி இங்கேயும் அதே போன்ற ஆடைகள் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். என் சிந்தனைக்கு என் சகோதரரும், தாயார் புவனேஷ்வரி, மற்றும் கலிபோர்னியாவில் INDIAN OCEAN MRS.GLOBE ஜெயாமகேஷ் ஆகியோர் உறுதுணையாக நிற்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் திருப்தி ஒன்றுதான் தனது குறிக்கோள் என்று சொல்லும் ப்ரியதர்ஷினி, அவர்களின் பாராட்டு தனக்கு உத்வேகம் அளிக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவையைச் சேர்ந்த, கலிபோர்னியாவில் INDIAN OCEAN MRS.GLOBE ஜெயாமகேஷ்ஜெயா மகேஷ் கூறும்போது :- நான் தற்போது அணிந்திருக்கும் சேலைகூட ப்ரியதர்ஷினியின் கைவண்ணத்தில் உருவானதுதான். கலிபோர்னியாவில் அணிவகுப்பில் கலந்து கொண்டபோது அணிந்த உடை ப்ரியதர்ஷினியின் கைவண்ணத்தில் உருவானதுதான். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்புப் பெண்களும் இவருடைய வாடிக்கையாளர்கள். இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடையின் அளவை மட்டும் கொடுக்கின்றனர்.

மற்றபடி எந்த மாடல், என்ன டிசைன் என்பதையெல்லாம் ப்ரிதர்ஷினியின் விருப்பத்துக்கே விட்டுவிடுகின்றனர். இதற்குக் காரணம், வாடிக்கையாளரின் உடல் வாகு மற்றும் அவரவர் முகத்தோற்றத்திற்கேற்ற வகையில் புதுப் புது டிசைன்களை ப்ரியதர்ஷினி அறிமுகம் செய்துவிடுவார். சுடிதார் ரகங்கள் மீது ப்ரியதர்ஷினிக்கு அலாதிப் பிரியம்.

அவ்வப்போது புதிய டிசைன்களை வடிவமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் HEENA GOGLAM,, சமூக ஆர்வலர் கவிதா ரமேஷ், பாலாஜி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)