மனிதச் சங்கிலி | கையெழுத்து இயக்கம் பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச கருத்தரங்கு

சென்னையில் மனிதச் சங்கிலி | கையெழுத்து இயக்கம் பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச கருத்தரங்கு.

பெண்கள் பாலியியல் உரிமைகள், பெண்கள் முன்னேற்றத்திற்கான அதிகாரங்கள், பெண்கள் சுகாதரத்திற்கான விழிப்புணர்வு மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம், தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் சென்னை பல்கலைகழகத்தில் நடைப்பெற்றது.

இந் நிகழ்ச்சியினை சென்னை பல்கலைகழக துணை வேந்தர் பி.துரைசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்யநாதன், உலக பாலியியல் சங்க துணைத் தலைவர் எஸ்தர் கரோனா ( அமெரிக்கா) பாலியல் உரிமை குழு நிர்வாகி டாமி பாலனென்(பின்லாந்து) சங்க உறுப்பினர்கள் யுகோ ஹிகா ஷி (ஜப்பான்) கிரிஸ்டோபர் பாக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இவ்விழாவில் உலக பாலியல் சங்க (வாஸ்) மீடியா கமிட்டித் தலைவர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ், பாலியல் உரிமைக் குழு உறுப்பினர் டி.காமராஜ், தென்னிந்திய மகப் பேறு மருத்துவர்கள் சங்கத் (ஆக்ஸி) தலைவர் டி.கே.சாந்தி குணசிங், சென்னை பல்கலைகழக மானுடவியல் துறை தலைவர் எஸ்.சுமதி, மகளிரியல் கல்வித்துறைத் தலைவர் வி.பாரதி ஹரி சங்கர், உளவியல் துறைத் தலைவர் எஸ்.தேன்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Skip to toolbar