மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)

மாற்றுத் திறனாளிகளுக்கான
மாரத்தான் போட்டி
கோவை,ஆக.19-
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும் முயற்சியாக கோவையில் சிறப்பாக இயங்கி வரும் பிரபல தொண்டு நிறுவனங்களான சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன், ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இந்நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கோவை வ.உ.சி.மைதானத்தில் ஐ.எஸ்.ஆர்.எனும் மாரத்தான் போட்டியை நடத்தியது. இதனை கோவை மாநகர போக்குவரத்து ஆணையர் சுஜித்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன், அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது.
இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 கி.மீ., தூரமும், 6 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 கி.மீ., தூரமும் நடத்தப்பட்டது. இதேபோல, பெண்களுக்கு 5 கி.மீ., தூரமும், ஆண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி மூலம் திரட்டப்படும் நிதி மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிவதற்கு உண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர இருக்கின்றது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகையும், பதக்கமும் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக லீமாரோஸ் மார்ட்டின், நடிகர் ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

AD

Skip to toolbar