கலைஞர் நினைவிடத்தில் மரியாதை கலைஞரின் முழுஉருவ படம் சட்டமன்றத்தில் திறக்கவும்,சேம. நாராயணன் வேண்டுகோள்

அமைப்புச்சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை கலைஞரின் முழுஉருவ படம் சட்டமன்றத்தில் திறக்கவும், அண்ணாசாலையில் சிலை நிறுவவும் வேண்டும் தமிழக அரசுக்கு சேம. நாராயணன் வேண்டுகோள்

அமைப்புச்சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
கலைஞரின் முழுஉருவ படம் சட்டமன்றத்தில் திறக்கவும், அண்ணாசாலையில் சிலை நிறுவவும் வேண்டும்
தமிழக அரசுக்கு சேம. நாராயணன் வேண்டுகோள்
சென்னை, ஆக. 10-
அமைப்புச்சாரா தொழி லாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மறைந்த தமிழக முதல் அமைச்சர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னை மெரீனாவில் உள்ள உழைப்பாளர் சிலையி லிருந்து தமிழ்நாடு மண் பாண்ட முன்னாள் வாரியத் தலைவர் சேம.நாராயணன் தலைமை யில் கீதா, நீலாவதி, கணபதி, கண்ணன், என்.பழனி, பெருமாள் பக்தர், கே.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் தொழிலாளர்களும் மவுன ஊர்வலமாக சென்று அறிஞர் அண்ணா நினைவிடத்திற்குள்ளே உள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், சேம. நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2006-ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு 36 வாரியங்களை அமைத்துக் கொடுத்தார். அதில் ஒன்று தமிழ்நாடு மண்பாண்ட தொழி லாளர்கள் நலவாரியமாகும். அதன் தலைவராகவும் என்னை நியமித்தார். தமிழகத்தை முதல் மாநிலமாக அமைத்துச் சென்றார். மத்தியில் 3 பிரதமர்களை உருவாக்கிய பெருமை கலைஞரையே சாரும். இந்தியாவுக்கும் வழிக்காட்டியாகத் திகழ்ந்தார். 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்று 60 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும் 5 முறை முதல் அமைச்சராகவும் இருந்தார். தமிழக சட்ட மன்றத்தில் கலைஞரின் திரு உருவ படத்தினை தமிழக அரசு திறக்கவேண்டும். அண்ணா சாலையில் பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளும் இருக் கிறது. அதற்கடுத்து எம்.ஜி.ஆர். சிலை இருக்கிறது. அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் இடைப்பட்ட இடத்தில் கலைஞரின் முழுஉருவ சிலையை நிறுவவேண்டும். சென்னையில் உள்ள பிரதாண சாலைக்கு அவரது பெயரை சூட்டவேண்டும்.
10க்கும் மேற்பட்ட மேம்பாலங்களை சென்னையில் கலைஞர் அமைத்துக் கொடுத்தார். அதில் மிகப்பெரிய மேம்பாலத்திற்கு அவருடைய பெயரை சூட்டவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Skip to toolbar