ஆர்.எம்.பி.குழும தலைவர் மகள் ரிதிஷா நிவேதா தேர்வு

(கோவை நிருபர் ராஜ்குமார்)

ஐ.நா.சபை அலங்கார அணிவகுப்பு போட்டி
ஆர்.எம்.பி.குழும தலைவர் மகள் ரிதிஷா நிவேதா தேர்வு
கோவை,ஆக.7-
ஐக்கியநாடுகள் சபை சார்பில் நடத்திய அலங்கார அணிவகுப்பு போட்டியில் ஆர்.எம்.பி.குழும தலைவர் தேவிகா ரமேஷின் மகள் ரிதிஷா நிவேதா திருமதி.ஐ.நா.தெற்காசியாவாக தேர்வு பெற்றுள்ளார்.
கோவை ஆர்.எம்.பி.குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தேவிகா ரமேஷின் மகள் ரிதிஷா நிவேதா ஆவார். இவர் உள் அலங்கார வடிவமைப்பாளராக உள்ளார். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அலங்கார அணிவகுப்பு போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிவகுப்பு போட்டியில் இந்திய அணிக்கு தேர்வு பெற்றார். பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் ரிதிஷாவை சர்வதேச போட்டிக்கு தேசிய இயக்குனர் ரேஷ்மா ஸ்ரீஜாய் தேர்வு செய்தார்.
போட்டி குறித்து ரிதிஷா செய்தியாளர்களுக்கு கூறியதாவது:–&
நான் நிலா பவுண்டேசன் என்னும் சமூக அமைப்பு நடத்தி வருகிறேன். ஜமைக்கா நகரில் உள்ள கிங்ஸ்டன் நகரில் ஜுலை 22 முதல் 28 வரை இந்த போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் உலகெங்கிலும் பங்கேற்க சுமார் 120 பேர் பதிவு செய்திருந்தனர். அந்தந்த நாடுகளுக்கு ஏற்றவாறு அணி உறுப்பினர்கள் அணிவகுத்து வந்தனர்.
ஆஸ்திரேலியா, பல்கேரியா, தாய்லாந்து, பெலாரஸ் ஆகியவற்றிலிருந்தும் சில பெண்களை நான் தொடர்புகொண்டேன். இவர்களை சந்தித்து பல்வேறு சமூக பணிகள் குறித்து பேசினேன். அது எனக்கு ஒரு புது உற்சாகத்தை தந்தது.
நான் திருமதி. ஜமைக்கா, திருமதி. அமெரிக்கா விருது பெற்றவர்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களுடன் தங்கி கிராமங்களை பார்வையிட்டேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கவனித்து, அவர்களுடன் நேரத்தை செலவிட்டேன். முதல் சுற்று ஜமைக்கா தேசிய பள்ளியில் இருந்து 100 குழந்தைகளுக்கு நம் தேசிய உணவு சமைக்க வேண்டும். நான் சிக்கன் பிரியாணி சமைத்துக் கொடுத்தேன். அவர்கள் அதை நன்றாக விரும்பி சாப்பிட்டார்கள். குழந்தைகளுடன் விளையாடி சுவற்றில் படங்களை வரைந்தோம். பின் 2&வது சுற்றில் தனிப்பட்ட நேர்காணல் நடந்தது. நான் எனது ‘நிலா பவுண்டேஷன்’ பற்றியும், பழங்குடி மக்களுக்கு நான் செய்து வரும் பணிகள் குறித்தும் விளக்கினேன்.
அடுத்த 5 நாட்கள் பேஷன் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருந்தது. பேஷன் உடைகள், பாரம்பரிய உடைகள் பற்றிய போட்டிகள் நடந்தன. இதிலிருந்து இறுதி சுற்றுக்கு 20 பெண்கள் தேர்வு பெற்றனர். இறுதியாக எனக்கு ஐ.நா.அமபாசடர் மற்றும் ஐ.நா.தெற்காசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன்.
இந்த விருது பெற்றவர்கள் ஐ.நா.சபையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு நான் எனது நிலா பவுண்டேசன் மூலம் பல நல்ல சமூக பணிகளை மேற்கொள்வேன். ஒவ்வொரு பெண்களும் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும். தற்போது எனது குரல் சர்வதேச அளவில் ஒலித்துள்ளது. இது நம் நாட்டிற்கு பெருமைதரக் கூடிய விஷயமாகும். நம் நாட்டில் குழந்தைகள் தவறாக கையாளப்படுகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். குற்றங்களுக்காக குரல் எழுப்புங்கள். அடுத்த ஐக்கிய நாடுகள் சபை அலங்கார அணிவகுப்பு 2019 இந்தியாவில் நடைபெற உள்ளது. நமது நாட்டினை சிறந்த உபசரிப்பு நாடாக மாற்றி காண்பிக்க இது ஒரு வாய்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.