என். ஜி. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம்

(கோவை நிருபர் ராஜ்குமார்)

என். ஜி. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம்
கோவை, ஆக.10-
டாக்டர். என். ஜி. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி துறைகள் சார்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் “கணினி தொழில்நுட்பங்களில் சமீப ஆராய்ச்சிகள்” என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர் திருமதி. மதுரா. வி. பழனிச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
ஜெனிவாவில் அமைந்துள்ள AMUIT எனப்படும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஸ்வச்பாரத் அமைப்பின் சர்வதேச தூதுவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர். முனைவர். துர்கா பிராஸாத் ஷர்மா அவர்கள் மற்றும் யுனைப்டெட் அரப் எமிரேட்ஸின் மஜ்மா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர். சரவணன் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர்.
பேராசிரியர். துர்கா பிரஸாத் ஷர்மா பேசுகையில், சர்வதேச அரங்கில் கணினி தொழில்நுட்பத்தில் இந்திய நாட்டின் ஆராய்ச்சியாளர்களின் பங்கு, இணையத்தில் இந்தியர்களின் பங்கு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, மற்றும் மாணவர்கள்களுக்கான நவீன ஆராய்ச்சிகள் பற்றியும், இணையப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் பற்றியும் பேசினார்.
பின்னர் பேராசிரியர் சரவணன் வெங்கட்ராமன் பேசுகையில், ஸ்மார்ட்போன் பயன்பாடு, ஆண்ட்ராய்டு, ஐபோன் இயக்குதளத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிலுள்ள செயலிகளின் நவீன ஆராய்ச்சிகள் பற்றியும், மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளவில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் உரையாற்றினார்.
கே.எம்.சி.ஆர்.இ.டி. யின் தலைமை செயல் அதிகாரி முனைவர்.ஓ.டி.புவனேஸ்வரன் மற்றும் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் கல்வி இயக்குநர் முனைவர். பெ.ரா.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினர். இந்த சர்வதேச கருத்தரங்கில் ஐந்து நாடுகளிலிருந்து பேச்சாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் 568 ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டு 259 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, தங்கள் ஆய்வு கருத்துரை வழங்குபவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் யு.ஜி.சி. பரிந்துரைக்கப்பட்ட ஜர்னல்களில் (UGC RECOMMENDED JOURNALS) பதிவிடப்படவுள்ளது.
இத்துவக்க விழாவில் கல்லூரியின் டீன்கள், துறை இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முனைவர். குமாரவேல் நன்றியுரை வழங்கினார்.